சீனாவில் உள்ள இடங்களின் பெயரை இந்தியா மாத்தினா.? கொதித்த அமைச்சர்!
சீனாவில் உள்ள இடங்களின் பெயரை இந்தியா மாற்றினால் என்னாகும் என ராஜ்நாத் சிங் கேள்வியெழுப்பியுள்ளார்.
ராஜ்நாத் சிங்
அருணாச்சல பிரதேசத்தில் மக்களவை தேர்தலோடு சட்டப்பேரவை தேர்தலும் சேர்த்தே நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, நாம்சாய் என்ற இடத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “இது எங்கள் வீடு. அண்மையில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மூன்று இடங்களுக்கு மறுபெயரிட்டு சீனா தனது இணையதளத்தில் வெளியிட்டது.
பெயர்களை மாற்றுவதால் எதையும் சாதிக்க முடியாது என்பதை நம் அண்டை வீட்டாருக்கு சொல்லிக்கொள்வோம். நாளையே சீனாவில் உள்ள மாகாணங்கள் மற்றும் இடங்களின் பெயரை நாம் மாற்றினால் அந்த நிலங்கள் நம்முடையது என்றாகி விடுமா?
சீனாவுக்கு பதிலடி
இந்தியாவின் நிலத்தை யாராலும் இப்போது எடுக்க முடியாது என்று நான் உறுதியளிக்கிறேன். நாங்கள் காங்கிரஸின் தவறுகளைச் சரிசெய்து, எல்லையின் உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளோம். இந்தியா தனது அண்டை நாடுகளுடன் நல்உறவையே பேண விரும்புகிறது.
ஆனால் சீனா எங்கள் சுயமரியாதையை புண்படுத்துகிறது. இந்த போக்கு தொடர்ந்தால், இன்றைய இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வலிமையும் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.