இந்தியா- சீனா எல்லையில் சிக்கி தவிக்கும் அருணாச்சலப் பிரதேசத்தின் அரசியல் பின்னணி!
வடகிழக்கு மாநிலங்களிலேயே இயற்கை எழில் கொஞ்சும் மாநிலம் அருணாச்சலப் பிரதேசம்தான். இம்மாநிலத்தின் மலைகளும், குன்றுகளும், சமவெளிப் பள்ளத்தாக்குகளும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடியவை. அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 13.87 லட்சம்தான். இதில் ஆண்கள் 7,13,912 பேரும், பெண்கள் 6,69,815 .
அருணாச்சலப் பிரதேசம்
இதில் படித்தவர்கள் சதவீதம் 65.38% ஆகும். 77.06% சதவீதம் பேர் கிராமப் புறங்களிலும், 22.94% பேர் நகர் புறங்களிலும் வாழ்கின்றனர்.அருணாச்சலப் பிரதேச மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள் தொகையில் 29.04% சதவீதம் பேர் இந்துகள். 1.95% சதவீதம் பேர் முஸ்லீம்கள்.
கேகோங்க் அபாங்க்
கேகோங்க் அபாங்க் சட்டமன்றத்திற்கு 1978, 1980, 1984 ஆண்டுகளில் மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்னர் மேல் சியாங் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 1990, 1995, 2000 மற்றும் 2004 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில், மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தேடுக்கப்பட்டார். 1980-இல் முதல் முறையாக அருணாசலப் பிரதேச மாநில முதல்வரக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆளும் இந்திய தேசிய காங்கிரசு கட்சி, சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்ததால், முதலமைச்சர் பதவியைத் துறந்தார்.
பின்னர் 2003-இல் ஐக்கிய ஜனநாயக் கட்சியை துவக்கிய சில மாதங்களில், அபாங்க் மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததால், வடகிழக்கு இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் முதன்முறையாக பாரதிய ஜனதா ஆட்சி மலர வழிவகுத்தது. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோற்றதால், அபாங்க் மீண்டும் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். அக்டோபர் 2004-இல் நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தலில், காங்கிரசு கட்சி வெற்றி பெற்றதால், அபாங்க் மீண்டும் அருணாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சரானார்.
தோர்ச்யீ காண்டு
9 ஏப்ரல் 2007-இல் தோர்ஜி காண்டு மாநில முதல்வராக பதவி ஏற்கும் வரை முதல்வர் பணியில் தொடர்ந்தார். காங்கிரசு கட்சியிலிருந்து விலகிய அபாங்க், 17 பிப்ரவரி 2014-இல் மீண்டும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து கொண்டார். முதலமைச்சராக 18 ஜனவரி 1980 முதல் 19 ஜனவரி 1999 முடியவும், பின்னர் ஆகஸ்டு 2003 முதல் ஏப்ரல் 2007 முடியவும் பணியாற்றினார்.
அதன் பின் இவருக்கு மாற்றாக அருணாச்சலப் பிரதேசத்தின் ஆறாவது முதலமைச்சராக, இந்திய தேசிய காங்கிரசு கட்சித் தலைவராக இருந்த தோர்ச்யீ காண்டு பதவியேற்றார். 2009 ஆண்டு தேர்தல்களில் தனது கட்சிக்கு வெற்றி தேடித்தந்து மீண்டும் 25 அக்டோபர் 2009ல் முதல்வராகப் பொறுப்பேற்றார். இவர் மோன்பா இனத்தைச் சேர்ந்தவர். மறைந்த லேகி டோர்ஜீயின் மகன். இவருக்கு நான்கு மகன்களும் இரு மகள்களும் உள்ளனர்.
ஜார்பம் காம்லின்
இந்தியப் படையின் உளவுத்துறையில் ஏழு ஆண்டுகள் பணி புரிந்துள்ளார். வங்காள தேச விடுதலைப் போரின்போது இவராற்றிய உளவுப்பணிக்காக தங்கப் பதக்கம் பெற்றார். ஏப்ரல் 30, 2011ல் ஒரு உலங்கு வானூர்தி விபத்தில் ஷீலா-பள்ளத்தாக்கில் மரணமடைந்தார்.
இதனால், மின்துறை அமைச்சராக பணியாற்றிய ஜார்பம் காம்லினை இடா நகரில் கூடிய காங்கிரசு சட்டப்பேரவை உறுப்பினர்கள் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். அதன்பின் 2011ல் ஏழாவது முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
நபம் துக்கி
அதனைத் தொடர்ந்து, நபம் துக்கி 1995 இல் சகலி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கேகோங் அபாங்கின் அமைச்சரவையில் துணை வேளாண் அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். 1998 இல் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு விமானப்போக்குவரத்து அமைச்சராக இருந்தார். 1999 இல் மீண்டும் அதே தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முகுத் மித்தி அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஆய அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
2004, 2009 ஆண்டுகளில் நடந்த அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்களில் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கேகோங் அபாங்க் மற்றும் தோர்ச்யீ காண்டு அமைச்சரவைகளில் அமைச்சராக பதவிவகித்தார். ஜார்பம் காம்லினுக்கு அடுத்தபடியாக, அருணாச்சலப் பிரதேச முதலமைச்சராக நவம்பர் 1, 2011 முதல் ஜனவரி 2016 வரை பதவியிலிருந்தார். அப்போது, பதவிவகித்த கலிகோ புல், காங்கிரஸ் கட்சியின் 21 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு இவருக்கு எதிரானார். இதனால் அருணாச்சலப் பிரதேச அரசியலில் சிக்கல் ஏற்பட்டது. இவரது ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத்தலைவர் ஆட்சி அறிவிக்கப்பட்டது.
கலிகோ புல்
பல குழப்பங்களுக்கு பிறகு குடியரசுத்தலைவர் ஆட்சி விலக்கப்பட்டு கலிகோ புல்லின் தலைமையில் பிரிந்த 21 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 11 பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன், கலிகோ புல் அருணாச்சலப்பிரதேசத்தின் ஒன்பதாவது முதல்வராக 2016ல் பதவியேற்றார். இதற்கிடையில் ஆட்சி கலைக்கப்பட்டதை எதிர்த்து நபம் துகி வழக்கு தொடர்ந்தார். வழக்கில் உச்சநீதிமன்றம் துகி அரசை கலைக்கும் வகையில்,
கவர்னர் ராஜ்கோவா பிறப்பித்த உத்தரவுகளுக்கு தடை விதித்து, ஆட்சி கலைப்புக்கு முந்தைய 2015, இருந்த நிலையே தொடர வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இதனால் கலிகோபுல் பதவியில் இருப்பது சட்டவிரோதமானது. இதன்பின் நபம் துக்கி முதலமைச்சராக பொறுப்பேற்றார். பதவியை இழந்து மன அழுத்தத்தில் இருந்த கலிகோபுல் 2016ல் தற்கொலை செய்துகொண்டார்.
பெமா காண்டு
அதனையடுத்து, உயிரிழந்த முன்னாள் முதல்வர் தோர்ச்யீ காண்டுவின் முதல் மகன் பெமா காண்டு சட்டமன்றத்துக்குப் போட்டியிட்டு, 2011 இல் முதல் முறையாக சட்டசபைக்குள் நுழைந்தார். பின் 2014ல் நடந்த தேர்தலில், முக்தோ தொகுதியில் இருந்து போட்டியின்றி வென்றார். இவர் தில்லி பல்கலைக் கழகத்தின் இந்துக் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்றவர். இதற்கு முன் நபம் துக்கி அமைச்சரவையில் மாநில நீர்வளம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
நுபம் துகி அரசுக்கு எதிராக கலிகோ புல் தலைமையில் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆட்சியைக் கவிழ்த்தபோது, தனது அமைச்சர் பதவியைவிட்டு விலகினார். இதற்கிடையில் நுபம் துகி தொடர்ந்த வழக்கில் ஆளுநர் ஆட்சியைக் கலைத்தது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து. நபம் துக்கி மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றார். சட்டமன்றம் கூடியபோது நபம் துக்கியும், சட்ட மன்ற உறுப்பினர்களும் ஒருமனதாக, பெமா காண்டுவை புதிய முதல்வராகத் தேர்ந்தெடுத்தனர். தற்போது வரை பாஜகவின் கீழ் இவர்தான் ஆட்சி செய்து வருகிறார்.
இந்தியா- சீனா எல்லை விவகாரம்
இதற்கிடையில், இந்தியாவின் வடகிழக்கே உள்ள கடைசி மாநிலம் அருணாசல பிரதேசம். அந்த மாநிலத்தின் சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் எல்லை சீனாவின் எல்லையையொட்டி இருக்கிறது. இதை தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் சீனா அருணாசல பிரதேசத்தின் பெரும்பாலான எல்லைப் பகுதிகளுக்கு உரிமை கொண்டாடி, அதை 'தென் திபெத்' என்று அழைக்கிறது.
அருணாச்சல பிரதேச எல்லை தகராறு இருந்தாலும் அதன் அழகான மலைகள், ஆறுகள், காடுகள் என அமைதியான மாநிலமாக இருந்து வந்தாலும், சில காலமாக அங்கு நிலைமை மாறி, எல்லைப் பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால், அருணாச்சலப் பிரதேசம் குறித்து சீனா முந்தைய காலங்களில் தொடர்ச்சியாக உரிமை கோருவதும், ஒவ்வொரு முறையும் இந்தியா அதனை கடுமையாக மறுத்தும் வருகிறது. தனது நிலைப்பாட்டிற்கு வலு சேர்க்கும் வகையில்,
உரிமை கோரல்
அருணாச்சலப் பிரதேசத்திற்கு இந்தியாவின் மூத்த தலைவர்களும், அதிகாரிகளும் வருகை தரும் போது, சீனா தனது எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது. மேலும், இது இந்தியாவின் ஒரு மாநிலமாக இருந்தாலும் நீங்கள் பிற மாநிலங்களுக்குச் சென்று வருவது போல நேரடியாக இங்கு நுழைய முடியாது. அருணாசல பிரதேசம் செல்வதற்கு முன் 'இன்னர் லைன் பெர்மிட்' (உள்நுழைவு அனுமதி) தேவை. இன்னர் லைன் பெர்மிட் என்பது அருணாசலத்தில் வெளியில் இருந்து வருபவர்களுக்கு (அனைத்து இந்தியர்கள் மற்றும் இந்தியர்கள் அல்லாதவர்கள்) வழங்கப்படும் சிறப்பு அனுமதி ஆவணமாகும்.
இந்நிலையில் அண்மையில் 30 மாதங்களுக்கும் மேலாக இரு தரப்பினரும் லடாக் செக்டாரில் உள்ள எல்லைப் பதட்டங்களுக்கு மத்தியில் புதிதாக பிரதேசத்தில் புதிதாக இந்திய மற்றும் சீன வீரர்களுக்கு இடையே அத்துமீறல் மற்றும் மோதல் சம்பவங்கள் நடந்தேறின.
அதில், கம்பி வேலிகளை தாண்டி உள்ளே வர முயன்ற சீன வீரர்களை கம்புகளைக் கொண்டு இந்திய வீரர்கள் விரட்டியடித்தனர். இந்த மோதல் குறித்து உலக நாடுகள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், எல்லைப் பிரச்சினைக்கு தீர்வுகாண ஏற்கனவே உள்ள நடைமுறைகளை இந்தியா-சீனாவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளன. எத்தனை ஆட்சிகள் மாறினாலும் இந்த பிரச்சணைக்கு தீர்வு கிடைத்தபாடில்லை.