மன்னிச்சிடுங்க டாடி.. நாங்கள் பிரிந்துவிட்டோம் - பிரபல நடிகரின் மகள் வெளியிட்ட கண்ணீர் Video!
வளர்ப்பு மகள்
நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியா கடந்த 2022-ம் ஆண்டு பிரபல சின்னத்திரை நடிகர் முனீஸ்ராஜா என்பவரைக் ரகசிய திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டதால், பிரியா தனது மகளே இல்லை என்று ராஜ்கிரண் அறிவித்தார். அப்போதுதான் பிரியா அவரது வளர்ப்பு மகள் என்பது வெளியுலகத்திற்கு தெரியவந்தது.
இந்நிலையில் தங்களது திருமணம் சட்டபூர்வமானது இல்லை என்றும் தாங்கள் பிரிந்துவிட்டதாகவும் கூறி பிரியா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், " நான் 2022-ம் ஆண்டு நடிகர் முனீஸ்ராஜாவை திருமணம் செய்துகொண்டேன்.
மன்னிச்சிடுங்க
இது மீடியா மூலமாக உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். திருமணத்திற்கு பிறகு நாங்கள் பிரிந்துவிட்டோம். பிரிந்து சில மாதங்கள் ஆகின்றன.
எங்கள் திருமணம் சட்ட பூர்வமான திருமணம் கிடையாது. இந்த திருமணத்திற்கு பிறகு என்னை வளர்த்த அப்பாவை மிகவும் கஷ்டப்படுத்தி விட்டேன். அப்படி நான் கஷ்டப்படுத்தி இருந்தாலும் எனக்கு ஒரு பிரச்சனை வந்தபோது அவர் என்னை கைவிடாமல் காப்பாற்றினார்.
இது நான் எதிர்பார்க்காதக் கருணை. எத்தனை முறை நான் அவரிடம் மன்னிப்புக் கேட்டாலும் போதாது. என்னை மன்னிச்சிடுங்க டாடி என்று” தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அப்பா என்ன மன்னிச்சிடுங்க.. நான் உங்கள கஷ்டப்படுத்திட்டேன்.. Video-வில் அழுத ராஜ்கிரணின் மகள்!#Rajkiran #MunishRaja #Priya pic.twitter.com/1U69eOfj8w
— mujip rahman (@mujipra45615083) February 1, 2024

கசிந்தது இந்தியாவின் தாக்குதல் திட்டம்: அணு ஆயுதத்துடன் களமிறங்குவதாக அறிவித்த பாகிஸ்தான்..! IBC Tamil
