இந்த கொடுமையை விட இறப்பதே மேல்; திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் - முருகன் கடிதம்!

trichy
By Sumathi Feb 01, 2024 07:21 AM GMT
Report

திருச்சி சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் பயஸ் ஆகியோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உண்ணாவிரதப் போராட்டம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகளாக சிறையில் இருந்த முருகன், ராபர்ட் பயஸ், சாந்தன், நளினி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் 2022ல் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.

robert payas

அதில், நளினி தவிர மற்ற நான்கு பேரும் திருச்சியில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை இலங்கைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

நளினியின் கணவர் திடீர் உண்னாவிரதம் - என்ன நடந்தது?

நளினியின் கணவர் திடீர் உண்னாவிரதம் - என்ன நடந்தது?

முதல்வருக்கு கோரிக்கை 

இந்நிலையில், முருகன் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகியோர் திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து முருகன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “32 வருட சிறை வாசத்திற்கு பிறகு தற்போது விடுதலை ஆகியுள்ளேன்.

murugan

பல மாதங்களாக என் குடும்பத்துடன் இணைந்து வாழ அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எனது கோரிக்கை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. றைவாசத்தை விட சிறப்பு முகாமில் இருப்பது கொடுமையாக இருக்கிறது. அன்றாடம் அனுபவிக்கும் கொடுமைகளை விட, இறப்பதே மேல் என்பதால், இன்று முதல் உண்ணாவிரதம் தொடங்குவதாக” குறிப்பிட்டுள்ளார்.

payas letter

மேலும், தாம் உட்பட சாந்தன், முருகன், ஜெயக்குமாரை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை கோரி ராபர்ட் பயஸ் என்பவரும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ”விடுதலை செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டு ஆனபோதும் சிறை கொட்டடியில் இருந்து விடுவிக்கப்படவில்லை.

முகாமில் எனது உரிமைகளுக்கோ, உணர்வுகளுக்கோ எந்த மதிப்பும் இல்லை” என ஆட்சியர் மூலம் முதலமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளார்.