நளினியின் கணவர் திடீர் உண்னாவிரதம் - என்ன நடந்தது?
அகதிகள் முகாமில் முருகன், சாந்தன் உள்பட 4பேர் உண்னாவிரதம் இருப்பதாக பரவிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையானவர்களில் நான்கு பேர் இலங்கையை சேர்ந்த நபர் என்பதால் அவர்கள் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் அங்கு உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, விடுதலையான நளினி அவரது கணவன் முருகனை சந்திக்க முகாமுக்கு வந்தார். அவரது வருகைக்கு போலீஸ் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதனையடுத்து, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தார்.
உண்னாவிரதம்?
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வருக்கும் போதுமான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
இவர்கள் நான்கு பேரும் சிறப்பு முகாமினுள் உண்ணாவிரதம் இருப்பதாகச் சொல்லப்பட்ட தகவலில் உண்மையில்லை. முகாமினுள் நடைபயிற்சி செல்ல அனுமதி கேட்டார்கள். அதனையும் கொடுத்துள்ளோம்.
முகாமினுள் இருக்கும் நால்வருடைய சொந்த நாட்டில் இருந்து, ஒப்புதல் கிடைக்கப்பெற்ற பின்னர், அவர்களை அவர்களுடைய நாட்டிற்கு அனுப்புவதற்கான நடைமுறைகள் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.