இமயமலை பயணம்..மோடி குறித்த அந்த கேள்விக்கு கடுப்பான ரஜினிகாந்த்!
நடிகர் ரஜினிகாந்த் ஒரு வார கால பயணமாக இமயமலை கிளம்பி இருக்கிறார்.
இமயமலை பயணம்
நடிகர் ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ படப்பிடிப்பை முடித்துவிட்டு தனது ஓய்விற்காக சென்னை திரும்பினார். இதனையடுத்து, இன்று அதிகாலை ஒரு வாரகால ஆன்மிக பயணமாக இமயமலை கிளம்பி இருக்கிறார்.
ஓவ்வொரு ஆண்டும் ஆன்மிக சுற்றுலாவாக இமயமலை பாபாஜி குகை, கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்கு ஆன்மிக சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் ரஜினி. இந்த வருடமும் தனது நண்பர்களுடன் இமயமலை பயணத்திற்காக இன்று காலை கிளம்பியுள்ளார்.
ரஜினி கட்சி ஆரம்பித்து ஆட்சிக்கு வந்திருந்தால் யோகி மாதிரிதான் இருந்திருக்கும் - திருமாவளவன் ஆவேசம்!
கடுப்பான ரஜினிகாந்த்
ஒருவார கால ஆன்மிக பயணத்தை முடித்துவிட்டு ஜூன் மாதம் சென்னை திரும்புகிறார். இதை தொடர்ந்து இன்று அவர் இமயமலை கிளம்பியபோது காரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் இமயமலை பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறினார். பிறகு மோடி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பாரா என்று கேட்டதற்கு ”அரசியல் கேள்விகள் வேண்டாமே” என்று கடுப்பாகி பதில் கூறினார். இளையராஜாவின் இசை காப்புரிமை சர்ச்சையைக் குறிப்பிட்டு,
“பாடல் பெரிதா? இசை பெரிதா?” என்று கேட்டதற்கு செய்தியாளர்களை சந்தித்து கையெடுத்து கும்பிட்டு சிரித்துக் கொண்டே, “அண்ணா, நோ கமெண்ட்ஸ்!” என்றார் ரஜினி.