இமயமலை to கவர்னர் மாளிகை - ஜார்க்கண்ட் மாநில கவர்னரை சந்தித்த ரஜினி
இமயமலை சென்றிருந்த நடிகர் ரஜினி தற்போது ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து கலந்துரையாடி இருக்கிறார்.
இமயமலையில் ரஜினி
ஜெயிலர் படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பு நடிகர் ரஜினி, இமயமலை புறப்பட்டு சென்றார். 4 ஆண்டுகள் கழித்து இமயமலை ரஜினி சென்ற நிலையில், வெளியான ஜெயிலர் திரைப்படம் மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
இதன் காரணமாக மகிழ்ச்சியில் நடிகர் ரஜினி இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது இமயமலை சென்றுள்ள ரஜினி, ரிஷிகேஷ், பத்ரிநாத், துவாரகா, பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றுள்ளார். முதலில் ரிஷிகேஷில் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்துக்குச் சென்ற அவர், ரிஷிகளைச் சந்தித்து உரையாடினார். பின்னர் உத்தரகண்ட்டில் வியாசர் குகைக்கு சென்று வழிபட்ட அவர், பத்ரிநாத் கோயிலுக்குச் சென்றும் வழிபட்டார்.
கவர்னருடன் சந்திப்பு
இமயமலை பயணத்தை முடித்து கொண்டு திரும்பிய ரஜினி தற்போது ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சிக்குச் சென்றுள்ளார். அங்குள்ள யோகதா சத்சங் தலைமையகம் சென்று அங்குள்ள சன்னியாசிகளை சந்தித்துள்ளார். பின்னர் ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்துப் பேசினார்.அது குறித்து புகைப்படங்கள் தற்போது இணையத்தளத்தில் வெளியாகி இருக்கிறது.