ரிலீஸானது தலைவர் 169 டைட்டில்.. ரசிகர்கள் ஆரவாரம்!

Rajinikanth Only Kollywood Anirudh Ravichander Nelson Dilipkumar
By Sumathi Jun 17, 2022 06:47 AM GMT
Report

தலைவர் 169 படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி நடிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

 ரஜினிகாந்த்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 169 படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு ‘ஜெயிலர்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ரிலீஸானது தலைவர் 169 டைட்டில்.. ரசிகர்கள் ஆரவாரம்! | Rajinikanth New Movie Name Jailor Released Title

நெல்சன் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசையமைத்து வருகிறார். அண்ணாத்த திரைப்படம் வெளியாகி 6 மாதங்கள் ஆவதால்,

ஜெயிலர்

இந்த வருடமே அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ரிலீஸானது தலைவர் 169 டைட்டில்.. ரசிகர்கள் ஆரவாரம்! | Rajinikanth New Movie Name Jailor Released Title

தலைவர் 169 படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

2023 பொங்கலுக்கு ரிலீஸ்

தலைவர் 169 படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்கி 2023 பொங்கலுக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் திடீரென்று சிவப்பு நிறத்தில் ஸ்டார் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, புதிய அப்டேட் ஒன்று வெளியாக உள்ளது என்று தெரிவித்தது.

இது எந்தமாதிரியான அறிவிப்பா இருக்கும் என்று ரசிகர்கள் யோசிக்காமால், ரஜினி படத்தின் புதிய அறிவிப்புதான் இருக்கும் என்று சமூகவலைதளங்களில் கூறி வந்தனர்.

தலைவர் 169 படத்தின் தலைப்பாக இருக்கலாம் என்று யூகிக்கப்பட்டது. படத்திற்கு ‘ஜெயிலர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ரத்தக் கறையுடன் தலைகீழாய் தொங்கும் கத்தியுடன் ஒரு போஸ்டரை வெளியிட்டு படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாகவே. ஜெயிலர் தான் தலைப்பு என்று சில தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அந்த பெயர்தான் என்று தெரிந்துவிட்டது.

இந்த போஸ்டர் மற்றும் தலைப்பை பார்த்த ரசிகர்கள், இந்தப் படம் ரஜினிக்கும், நெல்சனுக்கும் நல்ல கம்பேக் கொடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

பிரபல நடிகையை டேட்டிங் செல்ல வற்புறுத்திய மகள்! அந்த 46வயது நடிகை யார்?