ரஜினி இதில் கவனமா இருக்க வேண்டும்? போட்டுடைத்த டாக்டர்

Rajinikanth Tamil Cinema
By Sumathi Oct 03, 2024 09:30 AM GMT
Report

நடிகர் ரஜினிகாந்த்துக்கு என்ன பிரச்சினை? என்பது குறித்து டாக்டர் சொக்கலிங்கம் தகவல் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் கடந்த மூன்று நாட்கள் முன்னதாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதயத்திலிருந்து அடிவயிற்றுக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதைக் கண்டறிந்த மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக சிகிச்சை அளித்துள்ளனர்.

rajinikanth

தொடர்ந்து நலமாக உள்ளார். 2 நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்குச் சிகிச்சை அளித்த புகழ்பெற்ற இதய நிபுணர் டாக்டர் சொக்கலிங்கம் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். அதில், "நடிகர் ரஜினிகாந்த் எனக்குக் கடந்த 50 ஆண்டுகால நண்பர்.

வாழவிடுங்கள்; மகனுக்கு திருமணம் - திடீரென நெப்போலியன் அதிர்ச்சி வேண்டுகோள்

வாழவிடுங்கள்; மகனுக்கு திருமணம் - திடீரென நெப்போலியன் அதிர்ச்சி வேண்டுகோள்


மருத்துவர் தகவல்

அவரைப் பல ஆண்டுகளாக அறிந்தவன் நான். இரண்டு நாட்கள் முன்னதாக அவரை மருத்துவமனையில் சேர்த்தார்கள். வயிற்று வலி என வந்தார். உடனே அவரை ஸ்கேன் செய்து பார்த்ததில் மகாதமணி என்று சொல்லக் கூடிய குழாயில் கொழுப்பு அடைப்பு ஏற்பட்டிருந்தது.

dr chokkalingam

உடனடியாக அதற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நான் நேற்று மாலை அவரை சென்று பார்த்தேன். உடல்நலத்துடன் இருக்கிறார். ரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்கக் கவலைதான் காரணம். அடுத்து மன அழுத்தம். இவை இரண்டும் மிக முக்கியமாகத் தவிர்க்கப்பட்ட வேண்டும்.

அதற்குத்தான் உடற்பயிற்சி தேவை. சரியான உணவு. நல்ல தூக்கம். இவை கெடும்போது ரத்த குழாயில் கொழுப்பு சேர ஆரம்பிக்கும். ரஜினியைப் பொறுத்தவரை வயதும் ஒரு காரணம். அவர் இப்போது மது அருந்துவது இல்லை. புகைப்பழக்கம் இல்லை. மருத்துவர்கள் தரும் அறிவுரையைச் சரியாகக் கடைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர். எனவே பிரச்சினை இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.