மருத்துவமனையில் ரஜினிகாந்த் - உடல்நிலை குறித்து மனைவி சொன்ன அதிர்ச்சி தகவல்!
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்,அவரது மனைவி லதா ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார்.இந்த படம் 171 படமாகும். இதற்காக விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பு பணிகள் நடந்தது வந்தது .

இதில் கலந்து கொண்ட ரஜினி, கடந்த சில நாட்களுக்கு முன்புதான் சென்னை திரும்பினார். இந்நிலையில் நேற்று திடீரென நள்ளிரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சூழலில் நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து அவரது மனைவி லதா விளக்கம் அளித்துள்ளார்.
உடல்நிலை
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது : அடிவயிறு பகுதியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக மருத்துவமனையில் சமீப காலமாகச் சிகிச்சை பெற்று வந்தார்.இதற்காக இன்று (01/10/2024) காலை 6 மணிக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற இருப்பதால், முன்கூட்டியே பேசியபடி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் கவலைப்படும் அளவிற்கு எதுவும் இல்லை என்றும், அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவரின் மனைவி லதா தெரிவித்துள்ளார்.
ராஜபக்சர்களால் விடுதலைப் புலிகளின் 110 கிலோ தங்கம் கொள்ளை! ஷிரந்தியின் பெயரை பகிரங்கப்படுத்திய பொன்சேகா IBC Tamil
பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சுதந்திர ஊடக இயக்கம் மனுத் தாக்கல் IBC Tamil