ரஜினிகாந்துக்கு திடீர் உடல்நலக் குறைவு..மருத்துவமனையில் அனுமதி - என்ன ஆனது?

Rajinikanth Tamil nadu Chennai
By Swetha Oct 01, 2024 02:58 AM GMT
Report

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடல்நலக் குறைவு..

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது. கூலி படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்த ரஜினிகாந்த்,

ரஜினிகாந்துக்கு திடீர் உடல்நலக் குறைவு..மருத்துவமனையில் அனுமதி - என்ன ஆனது? | Rajinikanth Is Admitted In Hospital

நள்ளிரவில் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவரது ரசிகர்களுக்கு மிகுந்த வேதனையை அளித்துள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் அவருக்கு என்ன ஆச்சு என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், தொடந்து பட பிடிப்பில் இருந்து வந்த அவர் உடல் சோர்வு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அவரது உடல்நிலை சீராக உள்ளதாக அவரின் மனைவி லதா ரஜினிகாந்த் கூறி இருக்கிறார்.

நல்ல ஏமாத்திட்டாரு...இனி நடிச்சு என்ன பண்ண போகிறார் ரஜினி!! பிரபல இயக்குனர் விளாசல்

நல்ல ஏமாத்திட்டாரு...இனி நடிச்சு என்ன பண்ண போகிறார் ரஜினி!! பிரபல இயக்குனர் விளாசல்

என்ன ஆனது?

இது திட்டமிட்ட மருத்துவ சிகிச்சை தான் என்றும் அவருக்கு வயிற்றுப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டுள்ளதால் அதற்கான சிகிச்சை பெறவே ரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினிகாந்துக்கு திடீர் உடல்நலக் குறைவு..மருத்துவமனையில் அனுமதி - என்ன ஆனது? | Rajinikanth Is Admitted In Hospital

காலையில் அவருக்கு சிறப்பு சிகிச்சை மற்றும் உடல் பரிசோதனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை. இந்த பரிசோதனைக்கு பின்னர் இரண்டு முதல் 3 நாட்கள் வரை நடிகர் ரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

தற்போதைய நிலவரப்படி அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அவரது குடும்பத்தினரே தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் கவலையடைய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.