நல்ல ஏமாத்திட்டாரு...இனி நடிச்சு என்ன பண்ண போகிறார் ரஜினி!! பிரபல இயக்குனர் விளாசல்
இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டார் என்றால் நடிகர் ரஜினிகாந்த் தான்.
ரஜினிகாந்த்
ஒரு 10 வரிகளில் அடங்கிவிடுமா ரஜினியின் சகாப்தம். பேசினால் கூட ஒரு நாள் போதாது. தற்போது இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டார்'ஸான ஷாரூக் கான், சல்மான் கான், பிரபாஸ், விஜய் என அனைவருமே ரஜினியின் ரசிகர்கள் தான்.

70 வயதை கடந்து விட்ட நிலையிலும், தற்போதும் ரஜினியின் அடுத்த படமான வேட்டையன், லோகேஷ் கனகராஜின் கூலி போன்ற படங்கள் தான் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச எதிர்பார்ப்பை கொண்டுள்ள படங்களாகும்.

ரஜினி படங்கள் மட்டுமின்றி, தமிழக வரலாற்றிலும் ஒன்றாக கலந்தவர். அரசியலையும் அவர் விளக்கி வைத்துவிட்டார். கட்சி ஆரம்பித்து தீவிர அரசியலுக்கு வருவதாக தெரிவித்திருந்த நிலையில்,உடல் நிலை காரணமாக அதிலிருந்து விலகினார்.
ஏமாத்திட்டாரு
அந்த முடிவு அவரின் பல கோடி ரசிகர்களை தவிக்கவைத்து விட்டது. இது தொடர்பாக பிரபல இயக்குனரும், ரஜினியின் தீவிர ஆதரவாளராக இருக்கும் பிரவீன் காந்தி சில கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.

ரட்சகன், ஜோடி, ஸ்டார் போன்ற படங்களை இயக்கியுள்ள அவர் பேசும் போது, ரஜினி ஒரு தலைவரா? இப்போ அவர் நடித்து என்ன பண்ணப்போறார், அரசியலுக்கு வந்திருக்கணும். அந்த அளவிற்கு அவர் நல்ல மனிதன்.
அவரிடம் நல்ல விஷயங்கள் உள்ளன. அரசியலுக்கு அவற்றை மக்களுக்கு காட்டியிருக்கணும். தமிழ்நாடு நிலைகுலைந்து போயுள்ள இந்த நிலையில், அவர் ஒரு நல்ல தலைவராக மக்களுக்கு நல்லது செய்திருக்கணும். இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்.

நடித்தால் மட்டும் போதும் என நினைக்கிறார், ஆனால் தலைவராக வந்திருக்கணும். ரஜினி அதில் தவறிவிட்டார். அனைவரையும் ரஜினி ஏமாற்றிவிட்டார்" என்றார்.
டியாகோ கார்சியா விவகாரம்: ஈரானுக்கு எதிரான ட்ரம்ப் எச்சரிக்கையால் பிரித்தானியாவுக்கு அழுத்தம் IBC Tamil
அத்துமீறும் இந்திய கடற்றொழிலாளர்கள் நியாயம் கோருவது நியாயமற்றது! முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு IBC Tamil