வாழவிடுங்கள்; மகனுக்கு திருமணம் - திடீரென நெப்போலியன் அதிர்ச்சி வேண்டுகோள்
நெப்போலியன் நெட்டிசன்களிடம் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
தொடர் விமர்சனம்
நெப்போலியன் நெப்போலியன் மூத்த மகன் தனுஷுக்கு தசை சிதைவு நோய் இருப்பதால் குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டிலானார். அங்கு தொழில் செய்துவரும் அவர்; தனது மகனுக்கு திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்தார்.
அதன்படி, பெண் பார்த்து நிச்சயதார்த்தமும் அண்மையில் நடந்து முடிந்தது. இதற்கிடையில், சிலர் தனுஷுக்கு ஏன் இப்போது திருமணம் என்று இஷ்டத்துக்கு விமர்சனத்தை முன்வைத்து வந்தனர். இந்நிலையில், நெப்போலியன் இதுகுறித்த உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அதில், "எனது அன்பு நண்பர்களே, உலகமெங்கும் வாழும் தமிழ் சொந்தங்களே! எங்களது மூத்த மகன் தனுஷின் எட்டு வருட கனவு.. இந்தியாவில் பிறந்தாலும் சூழ்நிலை காரணமாக உலகத்தின் ஒரு கோடியில் இருக்கும் அமெரிக்காவில் வசிக்கிறோம்.
நெப்போலியன் வேண்டுகோள்
இப்போது மறுகோடியான ஜப்பானுக்கு பயணம் செய்ய ஒரு வருடம் திட்டமிட்டு ஆறு மாதங்களாக அதற்கு செயல் வடிவம் கொடுத்து ஒரு மாதமாக பயணம் செய்து இப்போது தனுஷின் ஆசையை நிறைவேற்றியிருக்கிறோம். எங்கள் வாழ்வை தவறாக விமர்சிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோளையும் வைக்கிறேன்.
நம் பெற்றோரின் கனவுக்காகவும், நமது கனவுக்காகவும், நமது பிள்ளைகளின் கனவுக்காகவும் அவசியம் வாழ வேண்டும். அப்படி வாழ்ந்துதான் பார்க்க வேண்டும். கடமையை நிறைவேற்ற வேண்டும். வாழ்க்கை ஒருமுறைதான். வாழ்ந்துதான் பார்ப்போமே. உண்மை தெரியாமல் கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சனம் செய்யாதீர்கள்.
உங்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம். 'ஒரு பக்க சொல் ஒரு யானை பலம்'. எல்லோரையும் வாழ்த்துங்கள். பிடிக்கவில்லை என்றால் இழிவாக மட்டும் பேசாதீர்கள். அது ஒருநாள் உங்களுக்கே திரும்பிவிடும். எண்ணம்போல்தான் வாழ்க்கை. நன்றாக யோசியுங்கள். சிந்தனையை செயல்படுத்துங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.