ஃப்ளைட்ல வந்தால் உயிருக்கே ஆபத்து - மகனுக்காக பெரிய ரிஸ்க் எடுக்கும் நெப்போலியன்!
நெப்போலியன் தனது மகனுக்காக மிகப்பெரிய ரிஸ்க்கை எடுக்கிறார்.
நெப்போலியன்
1990களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நெப்போலியன். மலையாளம், தெலுங்கு சினிமாக்களிலும் வில்லனாக அசத்தியுள்ளார். தொடர்ந்து, கிழக்கு சீமையிலே படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கினார்.
எட்டுப்பட்டி ராசா படத்திற்கு நடித்ததற்காக தமிழக மாநில திரைப்பட விருது கிடைத்தது. கலைமாமணி, எம்ஜிஆர் விருதுகளையும் பெற்றுள்ளார். 2001ல் திமுகவில் இணைந்த இவர் பெரம்பலூர் எம்பி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 2014ல் மு.க. அழகிரி திமுகவிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து அவரின் நம்பிக்கை பாத்திரமான நெப்போலியனும் ஓரங்கட்டப்பட்டார்.
மகனின் ஆசை
பின், பாஜகவில் இணைந்து அக்கட்சியின் மாநிலத் துறைத் தலைவராக இருந்தார். இதற்கிடையில் இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். அதில் மூத்தமகன் தனுஷுக்கு தசை சிதைவு எனும் அரிய வகை நோய் பாதிப்பு ஏற்பட்டதால் அவரால் நடக்க முடியாது.
எனவே, சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற நெப்போலியன் குடும்பத்துடன் அங்கேயே செட்டிலானார். டென்னசி நாஷ்வில்லியில் தொழிலதிபராக வலம் வருகிறார். ஐடி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். பல ஏக்கர் கணக்கில் விவசாயமும் செய்து வருகிறார். இந்நிலையில், மகன் தனுஷுக்கு இந்தியாவுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையால் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
விமானத்தில் அழைத்து சென்றால் அவரது உயிருக்கே ஆபத்து ஏற்படும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் கடல் வழியாக 70 நாட்கள் பயணித்து இந்தியா அழைத்து வர முடிவெடுத்துள்ளார்.
அதற்கு முன்னேற்பாடாக தற்போது, 7 நாள் பயணமாக கப்பலில் இருந்தபடியே மகனுடன் அமெரிக்காவை சுற்றி பார்த்துள்ளார்.