உங்க தம்பிய பாருங்க சூர்யா; உங்க அப்பா சொல்லிக்கொடுக்கலையா? ராஜேஸ்வரி பிரியா சாடல்!
சிகரெட் காட்சி குறித்து ராஜேஸ்வரி பிரியா சூர்யாவை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
சூர்யா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது நடித்து வரும் சூர்யா 44 படத்தில் இருந்து டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.
அதில், சூர்யா புகைப்பிடித்துக்கொண்டு வருவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இந்நிலையி இதனைக் கண்டித்து அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவி ராஜேஸ்வரி பிரியா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “ சிகரெட் காட்சிகளை மையப்படுத்தி நடித்து இளைய சமுதாயத்தை பாழ்படுத்தும் சினிமா நடிகர்களுக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். நடிகர் சூர்யா அவர்கள், தனது சொந்த தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், பெயரே வைக்காத புதிய படத்தின் டீசர் காட்சியில் சிகரெட் புகைத்தபடி வருவது கேடு கெட்ட காட்சியாக உள்ளது.
ராஜேஸ்வரி பிரியா தாக்கு
உங்கள் தம்பி நடிகர் கார்த்தி அவர்கள் புகை பிடிக்கும் காட்சியில் நடிக்கமாட்டேன் என்று கொள்கை பிடிப்போடு உள்ளார். உங்கள் அப்பா, ஒரு பிள்ளைக்கு நல்லது சொல்லி கொடுத்து, உங்களுக்கு சொல்லி கொடுக்க மறந்துவிட்டாரா? அல்லது தந்தை சொல்லை மதிக்கவில்லையா?
உங்கள் அறக்கட்டளையின் மூலம் படிக்கும் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லையா? உங்கள் நடிப்பை நம்பாமல் எப்போது சிகரெட்டை நம்பினீர்களோ அப்போதே நடிகராக தோற்று போய்விட்டீர்கள் சூர்யா” எனக் குறிப்பிட்டுள்ளார்.