பொறுக்கித்தனமான பாட்டு, இதெல்லாம் ஒரு பாடலா? - நடிகர் விஜய்-யை வெளுத்து வாங்கிய ராஜேஸ்வரி பிரியா
நா ரெடி பாடல் பொறுக்கித்தனமான பாட்டு, இதெல்லாம் ஒரு பாடலா? என பெண் அரசியல்வாதி ராஜேஸ்வரி பிரியா வழக்கு தொடர போவதாக தெரிவித்துள்ளார்.
நா ரெடி பாடலுக்கு தடை வேண்டும்
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், அண்மையில் விஜய்யின் பிறந்த நாள் இன்று லியோ படத்திற்காக அவர் பாடிய நா ரெடி என்கிற பாடலை படக்குழு வெளியிட்டு இருந்தது.
அனிருத் இசையில் அவர் பாடிய பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்தாலும் மற்றொரு புறம் எதிர்ப்புகளை பெற்றுள்ளது.
அந்த வகையில், அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி பிரியா, நா ரெடி பாடலுக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
விஜய் பொறுப்பேற்பாரா?
இது குறித்து பேசிய அவர், லியோ படத்தின் பாடல் வரிகள் முழுவதும் மதுவை பற்றியும், புகைப்பிடிப்பது பற்றியும், புகைப்பிடித்தால் உங்களுக்கு பவர் கிடைக்குதுனு சொல்றாங்க, மில்லி உள்ள போன கில்லி வெளியே வரும் இந்த மாதிரியான வார்த்தைகள் வரிகள் எல்லாம் பயன்படுத்தலாமா?
அவருக்கு ரசிகர்கள் 5 வயதில் இருந்து இருக்கிறார்கள் அப்படி இருக்கும் போது அவருக்கு கொஞ்சமாவது சமூகத்தின் மீது அக்கறை இருக்க வேண்டாமா? விரலுக்கு இடையில் தீப்பந்தமாம்...இதெல்லாம் ஒரு வரியா, இதை எழுதுன அசல் கோளாறு முழு கோளாறான ஆளு. இது மாதிரியான கீழ் தரமான வரிகளை பாட விஜய்க்கு எப்படி மனசு வந்துச்சு.
ஏற்கனவே சொல்லிருந்தாரு இனிமே சிகிரெட் வாய்ல வச்சுட்டு நடிக்க மாட்டேன்னு, ஆனா சர்க்கார் படத்துல முதல் காட்சியே சிக்ரெட் வச்சுட்டு இருந்தாரு, அதற்கும் நான் எதிர்ப்பு கொடுத்தேன். இந்த பாடல் மூலமா ஒரே ஒரு இளைஞனோ, ஒரு பள்ளி மாணவனோ வீணா போனா அதற்கு யார் பொறுப்பேற்பது. விஜய் பொறுப்பேற்பாரா?
வழக்கு தொடர போவதாக அறிவிப்பு
மாணவர்களுக்கு விருது கொடுத்து, அவர்களை நேர்ல சந்தித்தீர்களே, அந்த அரங்கத்தில் இந்த பாடலை உங்களால பதிவிட முடியுமா?. ஏதாவது ஒரு வரி இருந்தா பரவாயில்லா, பாடல் முழுக்கவே அப்படி தான் இருக்கிறது. எனக்கு பாட்டில்ல பத்தாது அண்டாவுல கொண்டுவந்து குடுனு சொன்னா, இதை எதிர்க்காம எப்படி இருக்க முடியும்.
இதை சினிமாவாக பார்க்க முடியாது. இதன்மூலம் ஒருநபர் வீணானாலும் அதற்கு விஜய் தான் காரணம். இதுதொடர்பா நான் வழக்கு தொடரப்போறேன். அந்த பாடல் வரிகளை நீக்க வேண்டும், அல்லது அந்த பாடலையே படத்தில் இருந்து நீக்க வேண்டும் என பொதுநல வழக்கு தொடர உள்ளேன்.
பொறுக்கித்தனமான பாட்டு
பொறுக்கித்தனமான பாட்டு, இதெல்லாம் ஒரு பாடலா? எத பாடுறோம்னு கூட தெரியலேன்னா என்ன மண்ணாங்கட்டிக்கு நீங்க பொதுநலம் குறித்து இந்த மாணவர்களுக்கெல்லாம் விருது கொடுக்குறீங்க. சமூக சேவை செய்து நீங்கள் மக்களை ஏமாற்றியது போதும். சிகரெட்டை புரமோஷன் பண்ண விஜய் எத்தனை கோடி வாங்குனாருன்னு இந்த இளைஞர்களுக்கு தெரியுமா? என சரமாரியாக நடிகர் விஜய்யை விமர்சித்து உள்ளார் ராஜேஸ்வரி பிரியா.