பிரபல நடிகையுடன் நடிகர் விஜய் இரண்டாம் திருமணம்? - சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி
தனது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்ய போவதாகவும், நடிகை ஒருவரை 2வது திருமணம் செய்ய போவதாக பரவிய தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகர் விஜய்.
முற்றுப்புள்ளி வைத்த விஜய்
நேற்று நடிகர் விஜய் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களை வாழ்த்தி அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார்.
அப்போது மாணவ, மாணவியர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் மத்தியில் உரையாற்றிய நடிகர் விஜய் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் இந்த சமூக வலைத்தளத்தில் வரும் 75% சதவீத செய்திகள் பொய்யானதாக இருக்கிறது. நான் எல்லாரையும் சொல்லல, ஒரு சில பேருக்கு கவர்ச்சிகரமான தகவலை வெளியிடுவதாக நினைத்து சிலவற்றை போலியாக வெளியிடுகிறார்கள் என கூறினார்.
சங்கீதாவுடன் விவாகரத்து, நடிகையுடன் இரண்டாம் திருமணம், தந்தையை மதிக்காமல் இருக்கும் விஜய் என பல வதந்திகளுக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகர் விஜய் என்று கூறப்படுகிறது.