திருந்தாத ஜென்மம் விஜய்..? மீண்டும் வெடிக்கும் ராஜேஸ்வரி பிரியா

Vijay Anirudh Ravichander Lokesh Kanagaraj Leo Sanjay Dutt
By Karthick Oct 06, 2023 05:51 AM GMT
Report

நடிகர் விஜய்யின் லியோ படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ராஜேஸ்வரி பிரியா தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.

விஜய்யின் லியோ

லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் தற்போது தென்னிந்தியாவில் அளவில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் "லியோ" . சஞ்சய் தத், திரிஷா, அர்ஜுன் என நட்சத்திர பட்டாளமே உள்ள இந்த படம் வரும் 19-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

rajeswari-priya-again-slams-vijay-for-leo

படத்தின் ட்ரைலர் நேற்று வெளியான நிலையில், படத்தின் ட்ரைலர் ரசிகர்களுக்கு பெரும் ட்ரீட்டாக அமைந்துள்ளது. படம் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் ஒரு புறம் அதிகரித்துள்ள நிலையில், ,மற்றொரு புறம் எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றது.

ராஜேஸ்வரி பிரியா கண்டனம்

லியோ படம் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ள ராஜேஸ்வரி பிரியா, லியோ ட்ரைய்லர் பார்த்தேன். விஜய் சுயநினைவோடுதான் நடித்தாரா? விஜய் கெட்ட வார்த்தை பயன்படுத்தியுள்ளது(1.46 நிமிடத்தில்)அவரது தரத்தை மிகவும் குறைத்துள்ளது. பெண்களை இழிவு செய்யும் வார்த்தை விஜய்க்கு வசனமா? திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்? - ரசிகர்களை தவறாக வழிநடத்தும் விஜய்க்கு எமது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து கொள்கிறேன். தகுதியில்லாத இயக்குனர் லோகேஷ் என்றும் திரைப்படத் துறை முன்வந்து இதனை எதிர்க்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே இவர் படத்தில் வெளியான நா ரெடி பாடலில் விஜய் சிகரெட் பிடிப்பது போல இடம்பெற்றிருந்த காட்சியை மிகவும் வன்மையை எதிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.