270 கிலோ எடை.. கழுத்தில் விழுந்த இரும்புக் கம்பி- பளுதூக்கும் வீராங்கனை துடிதுடித்து உயிரிழப்பு!
பளுதூக்கும் போது இரும்புக் கம்பி கழுத்தில் விழுந்து வீராங்கனை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீராங்கனை
ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா ஆச்சார்யா. இவரது மகள் யஸ்திகா ஆச்சார்யா( 17 வயது) பளுதூக்கும் வீராங்கனையாக உள்ளார். உள்ளூர் போட்டிகளில் கலந்து கொண்டு லிப்டிங் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறார்.
இதனையடுத்து மாநில போட்டிக்கு யஸ்திகா தயாராகி வருகிறார். இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் ஜிம்மில் பயிற்சி மேற்கொள்ள வந்துள்ளார். அப்போது தனது பயிற்சியாளர் உதவியுடன் இரும்பு கம்பியில் மொத்தம் 270 கிலோ எடை ஏற்றப்பட்டது.
அதனை யஸ்திகா தூக்கி பயிற்சி செய்ய முயன்ற போது தடுமாறியதால் எதிர்பாராத விதமாக 270 கிலோ எடையுடன் கூடிய இரும்பு கம்பி யஸ்திகாவின் கழுத்தின் பின்புறம் விழுந்தது. இதில் அவர் துடிதுடித்து மயக்கி கீழே விழுந்தார்.
உயிரிழப்பு
இதனால் அதிர்ச்சியடைந்த பயிற்சியாளர் மற்றும் உடன் இருந்த சக விளையாட்டு வீரர்கள் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
தற்பொழுது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. முன்னதாக கோவாவில் நடைபெற்ற 33வது தேசிய சாம்பியன்ஷிப்பில், பிரிவில் தங்கப் பதக்கமும், கிளாசிக் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்ற பவர்லிஃப்டராக யாஷ்திகா பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.