புற்றுநோயால் இறந்த மனைவி..சாம்பலில் மண்பானை செய்த கணவர்- ஏன் தெரியுமா?
மனைவியின் சாம்பலை வைத்து கணவர் மண்பானை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
மனைவியின் சாம்பல்
கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் 62 வயதான பியாவோ ஷுடாங். இவரது மனைவி லாங்ஐகுன. இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ள நிலையில், கணவன் மற்றும் மனைவி இருவரும் சேர்ந்து கடந்த 30 வருடங்கள் வருடங்களாக மண்பாண்ட தொழில் செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் லாங்ஐகுன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு உயிரிழந்தார். மேலும் மனைவியின் மீது தீராக்காதல் கொண்டிருந்த பியாவோ தனது மனைவியின் சாம்பலைக் கொண்டு களிமண்ணில் பானை செய்து பாதுகாத்து வருகிறார்.
மண்பானை
இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.அதில்,பியோவோ கூறுகையில், நான் என் மனைவியின் நினைவாக ஏதாவது சிறப்புச் செய்ய விரும்பினேன். இந்த மண்பாண்டம் என்னுடையது.நான் இறந்த பிறகு என்னை மனைவியின் உடல் அருகே அடக்கம் செய்ய வேண்டும்.
நாங்கள் சொர்க்கத்தில் என்றென்றும் ஒன்றாக இருப்போம். மேலும் மனைவி இறந்த தூக்கத்திலிருந்து மீள்வதற்கு,களிமண்ணில் பானை செய்து அவர் நினைவாகவே வாழ்வதுதான் மன ஆறுதல் தரும் விஷயமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.