வரிக்குதிரையாக மாறிய கழுதை..உயிரியல் பூங்காவில் நடந்த சம்பவம் -இதுதான் காரணம்!
கழுதைகளுக்கு வரிக்குதிரை போல பெயிண்ட் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சீனா
சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள ஜிபோ நகரில் Qinhu Bay Forest Animal Kingdom என்னும் உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாவரங்கள், பறவைகள், வெள்ளை புலிகள், சிங்கங்கள், வரிக்குதிரை, முதலை, நீர்நாய், மனிதக் குரங்கு உள்ளிட்ட விலங்குகள் உள்ளிட்டவை பராமரிக்கப்படுகின்றன.
இதில் அழிந்து வரும் அரிய உயிரினங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இந்த பூங்காவில் உள்ள கழுதைகள் வரிக்குதிரைகளைப் போலத் தோற்றமளிக்கக் கருப்பு மற்றும் வெள்ளை கோடுகளால் வரையப்பட்டுள்ளன.
கழுதை
இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.இது குறித்து உயிரியல் பூங்கா நிர்வாகம் சார்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும், பூங்காவிற்குப் பார்வையாளர்களை ஈர்க்கவும் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.
கடுமையான பனிப்பொழிவு காரணமாக விலங்குகளுக்குத் தீங்கு விளைவிக்காத வகையில் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதேபோல், புலிகள் மற்றும் பாண்டா கரடிகள் போல வரையப்பட்ட நாய்க்குட்டிகளின் புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் வைரலாகி கடும் எதிர்ப்பைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.