தண்ணீரில் உயிருக்கு தத்தளித்த நபர்..குதிரை செய்த செயல்- நன்றி கூறியதைப் பாருங்க!
உயிரைக் காப்பாற்றிய குதிரைக்கு நேர்ந்த சோகம் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சீனா
வடமேற்கு சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள சின்ஜியாங் உய்குர் பகுதியைச் சேர்ந்தவர் 39 வயதான உய்குர் யெலிபாய் டோசன்பெக். இவர் பைலாங் என்ற வெள்ளைக் குதிரையை வளர்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி,சியான்டாவ் நகரில் குளிர்ந்த ஹன்ஜியாங் ஆற்றின் அருகேயெலிபாய் டோசன்பெக்கும் அவரது குதிரை பைலாங்கும் அப்பகுதியில் பயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது, பாலத்திலிருந்து ஒருவர் ஆற்றுக்குள் தவறி விழுவதைக் பார்த்தனர்.
அப்போது ஆற்றங்கரையில் நின்றிருந்த அந்த நபரின் மகள் உதவிக்காகக் கூச்சலிட்டவே யெலிபாய்யும் அவரது குதிரையுடன் ஆற்றுக்குள் சென்றார். ஆற்றுக்குள் ஆபத்து இருந்த போதிலும், கிட்டத்தட்ட 40 மீட்டர் நீந்தியது.
குதிரை
இறுதியில், யெலிபாய் ஒரு கையில் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டு, மற்றொரு கையில் நீரில் மூழ்கிய நபரை இழுத்துக் காப்பாற்றினார். பின்னர், 6 நாட்கள் கழித்து குதிரைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு, கடும் காய்ச்சல் மற்றும் மலச்சிக்கல் ஏற்பட்டது.
தொடர்ந்து குதிரைக்குக் கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி பெய்லாங் பிப்ரவரி 11 அன்று உயிரிழந்தது. குதிரை இறந்த துக்கம் தாங்க முடியாத சியான்டாவோ நகர நிர்வாகம், ஆற்றின் அருகே ஒரு சிலையை அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.