ஸ்பாவில் உல்லாசம் - கண்ணாடி கதவை உடைத்து உள்ளே சென்ற ஐஏஎஸ் அதிகாரி!
ஸ்பாவில் நுழைந்து பெண் கலெக்டர் அதிரடி சோதனை மேற்கொண்டார்.
கலெக்டர் டினா தாபி
ராஜஸ்தான், பர்மீர் மாவட்ட கலெக்டராக இருப்பவர் டினா தாபி. இவர் சாமுண்டா சர்க்கிள் பகுதியில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது சந்தேகத்தின் பேரில் அதிகாரிகளை ஸ்பாவிற்கு அனுப்பி சோதனை செய்ய கூறினார். ஆனால் ஸ்பாவில் இருந்த ஊழியர்கள் அதிகாரிகளை உள்ளே அனுமதிக்கவில்லை.
ஸ்பாவில் சோதனை
இதையடுத்து கலெக்டரே களமிறங்கியுள்ளார். தொடர்ந்து, கண்ணாடி கதவை உடைக்க உத்தரவிட்டதன் பேரில், போலீசார் மற்றும் அதிகாரிகள் ஸ்பாவின் கதவை உடைத்தனர்.
பின் உள்ளே சென்றதில் 5 பெண்கள், 2 ஆண்கள் இருப்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் தவறான செயலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து 7 பேரும் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.