Sunday, May 4, 2025

இளம்பெண்களை வைத்து வாலிபர்களை மயக்கும் மசாஜ் சென்டர் - லாவகமாக பிடித்த போலீஸ்!

Sexual harassment Telangana
By Vinothini 2 years ago
Report

தெலுங்கானாவில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர்.

மசாஜ் சென்டர்

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் என்ற பகுதியில் சில தனியார் விடுதிகளில் மசாஜ் சென்டர்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு இளம் பெண்களை வைத்து வாடிக்கையாளர்களாக வரும் வாலிபர்கள் மற்றும் மாணவர்களை மயக்கி அவர்களிடம் இருந்த பல ஆயிரம் ரூபாய் பறித்துள்ளனர்.

women-rescued-in-massage-center

நேற்று இரவு திடீரென போலீசார் அந்த பகுதியில் ரெய்டுக்கு சென்றனர். அப்பொழுது அங்கு பாலியல் தொழில் நடந்து கொண்டிருக்கும்போதே கையும் களவுமாக அவர்களை மடக்கி பிடித்தனர்.

போலீஸ் அதிரடி

இதனை தொடர்ந்து, அங்கு இருந்த 14 வாடிக்கையாளர்கள் தாங்கள் மிகவும் கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இனிமேல் இப்படி செய்ய மாட்டோம் என கெஞ்சினர். ஆனாலும் அவர்களை விடவில்லை. அங்கு பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட 4 இளம்பெண்களை மீட்டனர்.

women-rescued-in-massage-center

மசாஜ் சென்டர் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், மற்றொரு ஸ்பா மற்றும் மசாஜ் சென்டருக்குள் நுழைந்து அங்கு இருந்த 18 வாடிக்கையாளர்களை பிடித்தனர். பின்னர், அங்கு பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட 10 பெண்களை மீட்டனர்.