ஃபேஷியல் செய்த பெண்ணுக்கு எச்ஐவி தொற்று - ஸ்பாவில் கவனிக்க வேண்டியவை..!
ஃபேஷியல் செய்த பெண் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாம்பயர் ஃபேஷியல்
அமெரிக்கா, நியூ மெக்சிகோவில் உள்ள அல்புகெர்கியூ ஸ்பாவில் முகப்பொலிவிற்காக சிகிச்சை மேற்கொண்ட 2 வாடிக்கையாளர்கள் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 2018ல் ஸ்பா சுகாதார அலுவலர்களால் மூடப்பட்டது.
இந்நிலையில், வாம்பையர் ஃபேஷியல் செய்து கொண்ட மற்றொரு நபருக்கு எச்ஐவி தொற்று இருந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்த ஸ்பாவில் சிகிச்சை மேற்கொண்ட 5 நபர்களுக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டுள்ளதாக DOH தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
எச்ஐவி தொற்று
இது தொடர்பாக ஸ்பாவின் உரிமையாளர், மரியா ராமோஸ் டி ரூயிஸ், உரிமம் இல்லாமல் மருத்துவப் பயிற்சி செய்ததுடன், 5 குற்றச்சாட்டுகளுக்கான குற்றத்தையும் ஒப்புக்கொண்டார். அதன் அடிப்படையில், 2022ல் மூன்றரை ஆண்டுகள் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
வாம்பயர் ஃபேஷியலில் பயன்படுத்தப்படும் உபகரணங்களை கிருமி நீக்கம் செய்யாமல் இருந்தால், ரத்தத்தில் பரவும் நோய் பரவுவது சாத்தியமாகும். சான்றளிக்கப்பட்ட பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் அல்லது தோல் மருத்துவர் உங்களுக்கு வாம்பயர் ஃபேஷியலை வழங்கினால், நோய்த் தொற்று பரவும் ஆபத்து குறைவாக இருக்கும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
இதுபோன்ற சிகிச்சை முறைகளுக்கு பல விதத்திலான நன்மைகள் இருந்தாலும், இது அழகை மேம்படுத்தும் என ஆதாரப்பூர்வமான ஆய்வு முடிவுகள் இதுவரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.