இத்தாலியில் ஒரே நேரத்தில் 3 நோய்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் - வெளியான அதிர்ச்சி தகவல்
இத்தாலியில் ஒருவருக்கு ஒரே நேரத்தில் 3 நோய்தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா
உலக நாடுகளில் கொரோனா பாதிப்புகள் பெரும் அச்சுறுத்தலாக நீடித்து வரும் நிலையில் கடந்த 2021ம் ஆண்டு வந்த டெல்டா வகையால் இந்தியாவில் 2வது அலை உருவாகி பலத்த பாதிப்புகளை ஏற்படுத்தியது.
இதன் பின்னர் டெல்டா பிளஸ் வகை வந்தபோதிலும் பெருமளவில் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. இந்த சூழலில் ஒமைக்ரான் என்ற புதிய உருமாறிய வகையானது தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு பின்பு உலக நாடுகளில் பரவ தொடங்கியது. முழு அளவில் தடுப்பூசி செலுத்தியவர்களையும் இந்த ஒமைக்ரான் விட்டு வைக்கவில்லை என்பதால் பொதுமக்களிடையே பீதியை உண்டாக்கியது.
கொரோனா பெருந்தொற்று இத்துடன் முடிந்து விடாது. உலக அளவில் ஒமைக்ரானின் அதிக பரவலானது புதிய உருமாறிய வகை உருவாக வழிவகுக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.
குரங்கு அம்மை
குரங்கு அம்மை என்பது ஒரு அரிய வகை தொற்று நோய்தான். இது மனிதர்களுக்கு இடையே எளிதில் பரவாது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்தே மனிதர்களுக்குப் இந்நோய் பரவுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில், 10ல் ஒருவர் இறக்க வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.தற்போது இந்நோய் உலகம் முழுவதும் பரவி வருகிறது.
ஒரே நேரத்தில் 3 தொற்று நோய்க்கு ஆளான மனிதர்
இந்நிலையில், இத்தாலியில் 36 வயதான நபருக்கு ஒரே நேரத்தில் கொரோனா, குரங்கு அம்மை, எச்.ஐ.வி. தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் அந்த நபர் ஸ்பெயின் சென்றுவிட்டு திரும்பியபோது அவருக்கு காய்ச்சல், தோல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.
அப்போது, மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில் அந்த நபருக்கு ஒரே நேரத்தில் கொரோனா, குரங்கு அம்மை, எச்.ஐ.வி. தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த நபர் மருத்துவர்களிடம், கொரோனா, குரங்கு அம்மையிலிருந்து குணமடைந்த பின், ஸ்பெயினில் பாதுகாப்பற்ற பாலியல் உறவு மேற்கொண்டேன் என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.