மகிந்தா ராஜபக்சேவின் மகன் கைது -இலங்கையில் திடீர் பரபரப்பு!
இலங்கையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் யோஹிதா ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை
இலங்கையில் முன்னாள் அதிபராகவும் பிரதமராகவும் பதவி வகித்தவர் மகிந்த ராஜபக்சே. இவருக்கு நமல், ரோஹிதா, யோஷிதா என்ற 3 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் யோஷித ராஜபக்சே பெலியத்த பகுதியில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
யோஹிதா ராஜபக்சே
இதுகுறித்து காவல்துறை செய்தி தொடர்பாளர் புத்திக மனதுங்க கூறும்போது, சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பில் யோஷித ராஜபக்சே, குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறினார்.
ஏற்கனவே சொத்து குவிப்பு புகார் தொடர்பாக யோஷித ராஜபக்சேவுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்த நிலையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.