உஷார் மக்களே.. இந்த 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் - வானிலை மையம் தகவல்!
தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம்
வங்க கடலில் கடலோரப்பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது. மேலும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகின்றது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது.

மேலும், தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கனமழை
இந்நிலையில், கன்னியாகுமரி,திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வரும் 5-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான்...! அநுர தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்து IBC Tamil