பிரேக் புடிக்கல.. தடுப்பு சுவர் மீது விட்டு ஏற்றிய டிரைவர் - பயணிகள் நிலை?
அரசு பேருந்து பிரேக் புடிக்காததால் டிரைவர் செய்த காரியம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்து விபத்து
சென்னை கோயம்பேட்டில் இருந்து பயணிகளுடன் வள்ளலார் நகரை நோக்கி 48 சி பேருந்து தங்கச்சாலை மேம்பாலம் வந்து கொண்டிருந்தது. அப்பொழுது திடீரென பிரேக்கில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் ஷாக்கான பேருந்து ஓட்டுநர் பதட்டமில்லாமல் நூதனமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றியுள்ளார்.
அந்த சமயத்தில் அவர் பிற வாகனங்கள் மீது மோதாமல் இருப்பதற்காக, சாலை தடுப்பில் மோதி பேருந்தை நிறுத்தியுள்ளார்.
சேதம்
இந்நிலையில், அந்த பேருந்தில் பயணித்த பயணிகள் 5 பேர் லேசான காயமடைந்தனர். பின்னர் பயணிகள் யாருக்கும் பெரியளவில் காயங்கள் ஏற்படவில்லை. இந்த விபத்தில் பேருந்தின் முன் பகுதி கண்ணாடிகள் உடைந்தது இதனால் அச்சத்தில் பயணிகள் முண்டியடித்துக் கொண்டு பேருந்தில் இருந்து கீழே இறங்கினர்.
மேலும், இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் சற்று நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.