நெல்லை நிவாரணத்தொகை; இன்னும் வாங்கலையா? இதை அவசியம் நோட் பண்ணுங்க
நெல்லை வெள்ள பாதிப்பு நிவாரணத்தொகை குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
நிவாரணத்தொகை
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமாரி இரு வாரங்களுக்கு முன் கனத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகள் மழை வெள்ளம் ஏற்பட்டு பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, வெள்ள சேதங்களை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக பாதிக்கப்பட்டபகுதி மக்களுக்கு 6 ஆயிரம் நிவாரணத்தொகை மற்றும் மற்ற பகுதிகளுக்கு ரூ.1000 வழங்குவதாக அறிவித்தார்.
முக்கிய தகவல்
அதன்படி, அதிகம் சேதம் ஏற்பட்ட பகுதிகளான நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் உள்ள தாலுக்காக்களில் ஒரு வாரத்திற்கு முன் ரேஷன் கடைகள் மூலம் அப்பகுதி மக்களுக்கு டோக்கன் தரப்பபட்டது.
அதன்பின், ஒரு வாரமாக நிவரணத்தொகை அனைத்து ரேசன் கடைகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நெல்லையில் நிவாரணத்தொகை தருவதற்கான கால அவகாசம் நாளை(03.01.2024) கடைசி நாள் என்று மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.