துவங்கிய டோக்கன் விநியோகம் - நெல்லையில் தீவிரம்..! யார் யாருக்கு 6000 நிவாரணம்..?
தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்கள் பெரும் மழையினால் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மழை வெள்ளம்
வரலாறு காணாத மழையினால் தென்தமிழக மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை ஆகியவை பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. அரசு மீட்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ள நிலையில், மக்கள் பலரும் தங்களது உடமைகளை இழந்து பரிதவித்து வருகின்றார்.
வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர் முக ஸ்டாலின், மழை வெள்ள பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக 6000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
டோக்கன்
திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை உள்ளிட்ட 12 இடங்களில் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ள நிலையில், இன்று டோக்கன் விநியோகம் துவங்கியிருக்கின்றது. நெல்லை மாவட்டம் இந்த மழையினால் ஒரு குறிப்பிட்ட பகுதி கடும் பதிப்புகளை சந்தித்துள்ளது.
அந்த பகுதியில் நிவாரணாமாக 6000 ரூபாயும், மற்ற இதர பகுதிகளுக்கு 1000 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என்று முன்னரே அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.