ரூ.6000 வெள்ள நிவாரண தொகைக்கு புதிய சிக்கல்..? உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு!

Tamil nadu Chennai Michaung Cyclone
By Jiyath Dec 12, 2023 03:23 AM GMT
Report

சென்னை வெள்ள நிவாரண தொகையை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நிவாரண தொகை  

சென்னையில் மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.6,000 வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த தொகை நியாயவிலைக் கடைகளில் ரொக்கமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ரூ.6000 வெள்ள நிவாரண தொகைக்கு புதிய சிக்கல்..? உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு! | Case Against Flood Relife Fund In Ration Shops

இந்நிலையில் தொகையை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த உத்தரவிடக்கோரி ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ராமதாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்‌ நன்றி - விஜயகாந்த்!

எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்‌ நன்றி - விஜயகாந்த்!

வங்கி கணக்கில்..?

அதில் "தமிழ்நாடு அரசு நிவாரண தொகை வழங்குவது பாராட்டக்குரியது. எனினும் அந்த தொகையை ரேஷன் கடைகள் மூலம் அல்லாமல் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்.

ரூ.6000 வெள்ள நிவாரண தொகைக்கு புதிய சிக்கல்..? உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு! | Case Against Flood Relife Fund In Ration Shops

ரேஷன் கடைகள் மூலம் ரொக்கமாக கொடுப்பதால், அதிகளவில் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், நியாயமாக பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரண தொகை கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் ராமதாஸ் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக அரசு பல்வேறு திட்டங்களுக்கான தொகையை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தி வரும் நிலையில் இந்த தொகையையும் வங்கி கணக்கில் செலுத்துவதில் அரசிற்கு எந்த வித சிரமும் இருக்காது எனவும் ராமதாஸ் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.