எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்‌ நன்றி - விஜயகாந்த்!

Tamil Cinema Vijayakanth Tamil nadu Chennai DMDK
By Jiyath Dec 12, 2023 02:47 AM GMT
Report

தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி கூறி தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

விஜயகாந்த் 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 18ம் தேதி போரூரில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், திடீரென நுரையீரல் தொற்று ஏற்பட்டது.

எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்‌ நன்றி - விஜயகாந்த்! | Vijayakanth Thanked Everyone Who Prayed For Me

மேலும், சளியும் அதிகரித்ததால் விஜயகாந்த் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டார். இதனை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் பூரண குணம் அடைந்து நேற்று வீடு திரும்பினார்.

அறிக்கை 

இதனையடுத்து, தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி கூறி விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் "மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது, நான் பூரண நலம்‌ பெற வேண்டி வாழ்த்திய திரை உலகை சேர்ந்த அனைவருக்கும்‌,

எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்‌ நன்றி - விஜயகாந்த்! | Vijayakanth Thanked Everyone Who Prayed For Me

அரசியல்‌ கட்சி பிரமுகர்களுக்கும்‌, தேமுதிக மாவட்ட கழக: செயலாளர்களுக்கும்‌, கழக நிர்வாகிகள்‌, கழகத்‌ தொண்டர்கள்‌ அனைவருக்கும்‌, எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்‌ என்‌ மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்‌" என குறிப்பிட்டுள்ளார்.