இலங்கை மக்களுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. அதேசமயம் உணவுப் பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையல், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.
இலங்கை மக்களுக்கு உதவுவது தொடர்பான தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இதனையடுத்து, இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில், தேமுதிக சார்பில் இலங்கை மக்களுக்கு உதவ ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இதற்கு முன்பு, திமுக சார்பில் ரூ.1 கோடியும், அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளமும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.