அப்டேட் ஆகும் 34 தமிழ்நாடு ரயில் நிலையங்கள் - தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!
ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகளை பிரதமா் மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.
34 ரயில் நிலையங்கள்
அம்ருத் பாரத் ரயில் நிலையதிட்டத்தின் இரண்டாம் கட்டமாக 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 553 நிலையங்களை ரூ.19,000 கோடி செலவில் மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
அந்த வரிசையில், தமிழ்நாட்டில் உள்ள 33 ரயில் நிலையங்கள் உலகத் தரத்தில் மேம்படுத்தப்பட உள்ளன. ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் ரூ.41,000 கோடி மதிப்பில் 2,000 ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமா் மோடி
அதில், சில ரயில்வே திட்டங்களை இன்று தொடங்கி வைக்கிறார். சென்னை கோட்டத்தில் 7 ரயில் நிலையங்கள், மதுரை கோட்டத்தில் 13 ரயில் நிலையங்கள், திருச்சி கோட்டத்தில் 4 ரயில் நிலையங்கள், சேலம் கோட்டத்தில் 8 ரயில் நிலையங்களும் இந்த திட்டத்தில் மேம்படுத்தப்பட உள்ளன.
திருநெல்வேலி ரயில் நிலையம் ரூ.270 கோடியிலும், கும்பகோணம் ரயில் நிலையம் ரூ.118 கோடியிலும் ஒரே கட்டமாக மேம்படுத்தப்பட இருக்கின்றன. மற்ற ரயில் நிலையங்கள் பல கட்டங்களாக மேம்படுத்தப்படவுள்ளன. 2 ஆண்டுகளுக்குள் இந்த திட்டங்களை தொடங்கி முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னை கடற்கரை ரூ. 14.58 கோடி, கிண்டி ரூ. 13.50 கோடி, அம்பத்தூா் ரூ. 21.57 கோடி, மாம்பலம் ரூ. 14.70 சென்னை பூங்கா ரூ. 10.68 கோடி, பரங்கிமலை ரூ. 14.15 கோடி.