பிரதமர் மோடியின் வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது தெரியுமா..? ஷாக் ஆயிடுவீங்க!
பிரதமர் நரேந்திர மோடி தனது சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பிரதமர் மோடி
மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தானாக முன்வந்து தனது சொத்து மதிப்புகள் தனக்கிருக்கும் கடன்கள் குறித்த விவரங்களை பொது பார்வைக்கு வைத்தார். இன்று வரை பல அரசியல் தலைவர்களால் அந்த முறை பின்பற்றப்படுகிறது.
அந்த வகையில் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி தனது சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், குஜராத் முதலமைச்சராக ஆனதிலிருந்து இன்றுவரை, எஸ்பிஐயின் காந்திநகர் கிளையில் ஒரு வங்கிக் கணக்கு மட்டுமே மோடி வைத்திருக்கிறார்.
காந்திநகர் கிளையில், இந்த ஆண்டு மார்ச் 31 வரை ஃபிக்ஸட் டெபாசிட்டில் 2.47 கோடி ரூபாய் அவர் வைத்திருக்கிறார். கடந்த ஓராண்டில் ஃபிக்ஸட் டெபாசிட் 37 லட்சம் அதிகரித்து இருக்கிறது. 2021 - 22 நிதியாண்டில் வெளியிட்ட அறிவிப்பில் காட்டப்பட்ட 1.89 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இன்ஷூரன்ஸ் பாலிசி, 2022-23 நிதியாண்டின் அறிவிப்பில் இல்லை.
எவ்வளவு பணம்?
தேசிய சேமிப்பு சான்றிதழ் வாயிலாக 9.19 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். கடந்த ஓராண்டில் இதில் 14,500 ரூபாய் அதிகரித்துள்ளது. பிரதமர் மோடிக்கு கடனோ, வாகனங்களோ, நில சொத்துகளோ இல்லை. 2020 வரை, பிரதமரிடம் ரூ.20,000 மதிப்புள்ள உள்கட்டமைப்பு பத்திரங்கள் (Infrastructure bonds) இருந்தன.
இவருக்கு பங்குச் சந்தையில் எந்த ஈடுபாடும் இல்லை. இந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை ஃபிக்ஸட் டெபாசிட்டை தவிர்த்து பிரதமரின் வங்கி இருப்பில் வெறும் 574 ரூபாய் இருந்தது. மேலும், அவரிடம் 30,240 ரூபாய் ரொக்கமாக உள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மோடி எந்த சம்பளமும் பெறாமல், தனது முழு சம்பளத்தையும் நன்கொடையாக வழங்குகிறார்.