பிரதமர் மோடி திடீர் சென்னை வருகை; என்ன காரணம் - பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்!
ஏப்.8-ல் பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி
சென்னை, விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி வரும் 8-ம் தேதி சென்னை வருகிறார். மேலும், சென்னை - கோயம்புத்தூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை, தாம்பரம்-செங்கோட்டை இடையே வாரம் 3 முறை விரைவு ரயில் சேவை ஆகியவற்றையும் தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து, ரூ.294 கோடி மதிப்பில் திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே 37 கி.மீ. தொலைவுக்கு முடிக்கப்பட்டுள்ள அகலப்பாதையை அர்ப்பணிக்க உள்ளார்.
சென்னை வருகை
இதனால், சென்ட்ரல் ரயில் நிலையத்தின் கூடுதல் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துவது, அருகில் உள்ள கட்டிடத்தில் போலீஸார் பாதுகாப்பு, 11-வது நடைமேடையில் நிகழ்ச்சி நடத்துவது ஆகியவை தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஆனால் அங்கு அவர் வருவது உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருவதாக ரயில்வே போலீஸார் தெரிவித்தனர்.