பிரதமர் மோடி பிறப்பால் OBC இல்லை; மக்களை ஏமாத்துறாரு - சாடிய ராகுல் காந்தி

Rahul Gandhi Narendra Modi Odisha
By Sumathi Feb 08, 2024 10:42 AM GMT
Report

மோடி இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பிறந்தவர் இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி

இந்திய ஒற்றுமை நீதி எனும் யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். இந்த யாத்திரை மணிப்பூரில் தொடங்கியது. அசாம், மேகாலயா, மேற்குவங்கம், பிகார், ஜார்கண்ட் மாநிலத்தை கடந்துள்ளது.

rahul ganthi

தற்போது, ஒடிசாவில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த யாத்திரை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அங்கு மக்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி,

அமித்ஷாக்கு வரலாறே தெரியாது; பாஜகவுக்கு பயம் -விளாசிய ராகுல் காந்தி

அமித்ஷாக்கு வரலாறே தெரியாது; பாஜகவுக்கு பயம் -விளாசிய ராகுல் காந்தி

மோடி- ஓபிசி?

"பிரதமர் மோடி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் (ஓபிசி)பிறந்ததாக நாட்டையே ஏமாற்றி வருகிறார் அவர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறக்கவில்லை. பொதுப் பிரிவில் இருந்த 'தெலி' சாதியில்தான் மோடி பிறந்தார்.

rahul vs modi

2000-ஆம் ஆண்டு பாஜக ஆட்சியின் போதுதான் அந்த சாதியை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் மாற்றினர். இதனை அனைத்து பாஜக தொண்டர்களிடமும் கூறுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.