ராகுல் காந்தி திருமணம் - அந்த பெண்ணிடம் சட்டென கேட்ட சோனியா!
ராகுல் காந்தி திருமணம் குறித்து, சோனியா காந்தி பேசியுள்ளார்.
ராகுல் காந்தி
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை நடத்தினார். அப்போது, ஹரியாணா மாநிலம் சோனிபட் மதினா கிராம பெண் விவசாயிகளை சந்தித்தார்.
அப்போது, அங்கு வசித்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்களிடம், தனது வீட்டில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வதாக கூறியிருந்தார்.
திருமணம்
இந்நிலையில், அந்த பெண்கள் சமீபத்தில் டெல்லி வந்து சோனியா, பிரியங்கா, ராகுல் உள்ளிட்டோரை சந்தித்து பேசினர். அப்போது மூதாட்டி ஒருவர், ராகுல் திருமணம் குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சோனியா, ‛‛ ராகுலுக்கு பொருத்தமான பெண்ணை ஏன் நீங்கள் பார்க்கக்கூடாது '' என பதிலளித்தார்.அதைக் கேட்டுக் கொண்டிருந்த ராகுல், ‘‘அது நடக்கும்’’ என்று கூறியதும் அனைவரும் சிரித்தனர். இந்த வீடியோ வைரகாகியுள்ளது.