அமித்ஷாக்கு வரலாறே தெரியாது; பாஜகவுக்கு பயம் -விளாசிய ராகுல் காந்தி

Amit Shah Rahul Gandhi India
By Sumathi Dec 12, 2023 12:21 PM GMT
Report

அமித்ஷாவுக்கு வரலாறு தெரியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

அமித்ஷா பேச்சு

மாநிலங்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீர் விவகாரத்தில் முன்னால் பிரதமர் நேரு தவறு செய்துவிட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள ராகுல் காந்தி,

rahul about amitsha

”ஜவஹர்லால் நேரு அவரின் வாழ்க்கையை நாட்டுக்காக அர்ப்பணித்துள்ளார். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு பல ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். அமித்ஷாவுக்கு வரலாறு தெரியாது.

உலகக்கோப்பை தோல்வி; அந்த கெட்ட சகுனங்கள்தான் காரணம் - ராகுல் காந்தி மறைமுக தாக்கு!

உலகக்கோப்பை தோல்வி; அந்த கெட்ட சகுனங்கள்தான் காரணம் - ராகுல் காந்தி மறைமுக தாக்கு!

ராகுல் பதிலடி

வரலாற்றை மாற்றி எழுத முயன்று கொண்டிருக்கும் அவருக்கு உண்மையான வரலாறு தெரிந்திருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இது எல்லாமே மக்களின் கவனத்தை ஜாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரத்தில் இருந்து திசைதிருப்புவதற்காக செய்யப்படுபவை.

அமித்ஷாக்கு வரலாறே தெரியாது; பாஜகவுக்கு பயம் -விளாசிய ராகுல் காந்தி | Rahul Ganthi About Amitsha And Bjp

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து பேசுவதற்கே பாஜக பயப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் இந்த விவகாரத்தில் தொடர்ந்து முன்னெடுக்கும். ஏழை,எளிய மக்களுக்கான உரிமைகள் கிடைப்பதற்கு காங்கிரஸ் போராடும்” என்றுத் தெரிவித்துள்ளார்.