நேஷனல் ஹெரால்டு வழக்கு : அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்றும் ஆஜரானார் ராகுல் காந்தி

Rahul Gandhi
By Irumporai Jun 14, 2022 06:10 AM GMT
Report

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியிடம் நேற்று 9 மணி நேரத்திற்கு மேலாக அமலக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில், இன்று மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.


சிக்கலான நேஷ்னல் ஹெரால்டு பத்திரிக்கை

மறைந்த முன்னாள் பிரதமர் நேரு நிறுவியது நேஷனல் ஹெரால்டு பத்திரிகை. இந்த பத்திரிக்கையின் பங்குகளை , சோனியாவும், ராகுலும் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு பங்குதாரர்களின் ஒப்புதலை பெறாமல் மாற்றப்பட்டதாக புகார் எழுந்து.

நேஷனல் ஹெரால்டு வழக்கு : அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்றும் ஆஜரானார் ராகுல் காந்தி | Rahul Gandhi Will Appear Ed Office Today Also

இதனையடுத்து சோனிய மற்றும் ராகுல் காந்தி மீது பாஜ தலைவர் சுப்பிரமணிய சுவாமி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தற்போது அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் , ராகுல் காந்தி நேற்று காலை 11 மணி அளவில் டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை உதவி இயக்குநர் அந்தஸ்திலான அதிகாரிகள் விசாரணை நடத்தி நடத்தினர்.

உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் ராகுல் காந்தியிடம் இரவு 9.30 மணி வரை விசாரணை நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 9 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

மீண்டும் ஆஜரான ராகுல்

இதனையடுத்து ராகுல் காந்தி இன்று மீண்டும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரா ராகுல் காந்தியிடன் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று டெல்லி முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இன்றும் போராட்டம் நடத்தப்படலாம் என கூறப்படுவதால், பாதுகாப்பு நடவடிக்கையாக, காங்கிரஸ் கட்சியின்  மூத்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், குறிப்பாக எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், பி.எல்.புனியாவை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது குறிபிடத்தக்கது.  

நேஷனல் ஹெரால்டு வழக்கு :ராகுல் காந்தியிடம் மூன்றரைமணி நேரம் விசாரணை நடத்திய அதிகாரிகள்