கட்சில இது இல்லவே இல்லை; அப்புறம் எப்படி பாஜகவை வீழ்த்துறது? ராகுல் ஆவேசம்!
பாஜகவை வீழ்த்துவதற்கான அறிவுரைகளை ராகுல் காந்தி வழங்கியுள்ளார்.
ராகுல் காந்தி
5 மாநில தேர்தல்களில் தெலுங்கானாவை தவிர காங்கிரஸ் கட்சி 4 மாநிலங்களில் தோல்வியடைந்தது. இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது.
அதில், கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமை வகித்தார். சோனியா காந்தி, ராகுல் காந்தி, செயற்குழு உறுப்பினர்கள், மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, பாஜகவை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்பது மிகவும் அவசியம்.
அட்ஜெட்ஸ்ட்மென்ட் தேவை
ஆனால் நம் கட்சியில் அட்ஜட்ஸ்மென்ட் செய்யும் நிலை என்பது பலருக்கும் இல்லை. இதனால் தான் தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளோம். வீழ்த்த பிராந்திய கட்சிகள், சிறு சிறு கட்சிகளின் ஆதரவு என்பது வேண்டும். ஆனால் நம் கட்சியின் மாநில தலைமை அதனை ஏற்க தயாராக இல்லை.
சிறிய கட்சிகளை கூட்டணிக்கு அழைத்து அவர்களின் ஆதரவை பெற்றிருக்க வேண்டும். இது நடக்கவில்லை. பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றால் சில இடங்களில் அட்ஜெட்ஸ்ட்மென்ட் என்பது தேவை. பாஜக ஒன்றும் வீழ்த்த முடியாத கட்சி அல்ல. கடந்த 2018 ம் ஆண்டில் சத்தீஸ்கர், ராஜஸ்தானில் வீழ்த்தி உள்ளோம்.
அந்த கட்சிக்கு மாநிலங்களில் கட்டமைப்பு வலுவாக உள்ளதாக சிலர் கூறுகின்றனர். அப்படி என்றால் நம் கட்சியின் கட்டமைப்பை ஏன் வலுப்படுத்த முடியவில்லை?
வரும் நாடாளுமன்ற தேர்தலை திறம்பட எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும் என சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். இதற்கு மூத்த தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.