இரு சித்தாந்தங்களின் யுத்தம் இது - மக்களவை தேர்தல் குறித்து ஆவேசமான ராகுல் காந்தி
நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்திட தீவிர முனைப்பை காட்டி வருகின்றது காங்கிரஸ்.
காங்கிரஸ் தீவிரம்
நாட்டிலுள்ள இருக்கும் பல எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து பலமான இந்தியா கூட்டணியை சேர்த்து அதில் முக்கிய பங்கையும் ஆற்றிவருகின்றது காங்கிரஸ்.
10 ஆண்டுகளாக ஆட்சியை இழந்த நிலையில், வரும் தேர்தலில் பாஜகவை எப்படியேனும் வீழ்த்திட வேண்டும் என பெரும் முயற்சிகளை அக்கட்சி எடுத்துள்ளது.
சில மாநிலங்களில் பாஜகவின் எதிர்ப்பு காங்கிரஸ் கூட்டணிக்கு கைகொடுக்கும் என்றே கூறப்படுகிறது.
ராகுல் காந்தி
ஆவேசம் இந்நிலையில், தான் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் தளப்பதிவில், இந்த தேர்தல் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான சண்டை!
ஒரு பக்கம் இந்தியாவை எப்போதும் ஒருங்கிணைத்த காங்கிரஸும், இன்னொரு பக்கம் மக்களைப் பிரிக்க முயல்பவர்களும் இருக்கிறார்கள். நாட்டைப் பிளவுபடுத்த நினைத்த சக்திகளுடன் கைகோர்த்து அவர்களைப் பலப்படுத்தியவர்கள், நாட்டின் ஒற்றுமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடியவர்கள் யார் என்பதற்கு வரலாறு சாட்சி.
ये चुनाव दो विचारधाराओं की लड़ाई है!
— Rahul Gandhi (@RahulGandhi) April 10, 2024
एक तरफ कांग्रेस है जिसने हमेशा भारत को जोड़ा और दूसरी तरफ वो हैं जिन्होंने हमेशा लोगों को बांटने की कोशिश की है।
इतिहास गवाह है किसने देश का विभाजन चाहने वाली ताकतों से हाथ मिला कर उन्हें मज़बूत किया और कौन देश की एकता और स्वतंत्रता के लिए…
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது ஆங்கிலேயர்களுடன் நின்றவர் யார்? இந்தியாவின் சிறைகள் காங்கிரஸ் தலைவர்களால் நிரப்பப்பட்டபோது, நாட்டைப் பிளவுபடுத்தும் சக்திகளுடன் மாநிலங்களில் ஆட்சியை நடத்துவது யார்?
அரசியல் தளங்களில் இருந்து பொய்களை உமிழ்வதால் வரலாறு மாறாது.