வருடம் 1 லட்ச நிதியுதவி - பெண்களுக்காக காங்கிரஸ் கட்சியின் 5 அதிரடி வாக்குறுதிகள் ..!

Indian National Congress Rahul Gandhi India Election
By Karthick Mar 13, 2024 04:39 PM GMT
Report

வரும் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றால், நலிவுற்ற பெண்களுக்கு வருடம் 1 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

காங்கிரஸ்

10 வருடமாக எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் இம்முறை பலமான இந்தியா கூட்டணியை சேர்த்து ஆளும் கட்சியாக மாற, பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

congress-election-manifesto-for-womenrahul-gandhi

நாட்டின் பல எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணியில் இடம்பிடித்திருக்கும் காரணமாக, அந்த கூட்டணி ஆட்சி தான் மத்தியில் அமைய போகிறது என கருத்து கணிப்புகளில் தெரிவிக்கப்படுகிறது.

பெண்களுக்கான 5 வாக்குறுதிகள்

காங்கிரஸ் கட்சியும் தனி முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அண்மையில் கட்சியின் இளைஞர்களுக்கான வாக்குறுதிகளை கட்சி வெளியிட்டது. அதனை தொடர்ந்து இன்று கட்சியின் பெண்களுக்கான 5 வாக்குறுதிகளை கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ளார்.

congress-election-manifesto-for-womenrahul-gandhi

அவை வருமாறு,

1- "ஆதி ஆபாடி, பூரா ஹக்" காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும்.

5 இளைஞர் உரிமை - இது காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி - ராகுல் காந்தியின் பட்டியல்

5 இளைஞர் உரிமை - இது காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி - ராகுல் காந்தியின் பட்டியல்

2"மகாலட்சுமி" ஏழைப் பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.

3- "சக்தி கா சம்மான்"மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களின் ஊதியம் இரண்டு மடங்கு உயர்த்தப்படும்.

congress-election-manifesto-for-womenrahul-gandhi

4 -"அதிகார மைத்ரி" பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் உரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பஞ்சாயத்துக்கு ஒரு பெண் பணியாளர் நியமனம் செய்யப்படும்.

5 -"சாவித்ரி பாய் ஃபுலே விடுதிகள்" நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான ஒரு விடுதி கட்டப்படும்.