5 இளைஞர் உரிமை - இது காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி - ராகுல் காந்தியின் பட்டியல்
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ்
10 வருடமாக எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் இம்முறை பலமான இந்தியா கூட்டணியை சேர்த்து ஆளும் கட்சியாக மாற, பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
நாட்டின் பல எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணியில் இடம்பிடித்திருக்கும் காரணமாக, அந்த கூட்டணி ஆட்சி தான் மத்தியில் அமைய போகிறது என கருத்து கணிப்புகளில் தெரிவிக்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியும் தனி முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது கட்சியின் வாக்குறுதிகளை கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.
இளைஞர் உரிமை என்ற பெயரில் 5 வாக்குறுதிகளை அவர் வெளியிட்டுள்ளார். அவை வருமாறு,
1.30 லட்சம் மத்திய அரசின் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்
2. ஆன்லைன் டெலிவரி பணிகளில் வேலை செய்பவர்களுக்கு சமுதாய பாதுகாப்பு அளிக்கப்படும்
3. தேர்வு வினா தாள்கள் கசிவதைத் தடுக்க கடுமையான சட்டங்கள் பிறப்பிக்கப்படும்
4. புதிதான நிறுவனங்களுக்கான முதலீடாக ரூ.5000 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்
5. பட்டதாரி மற்றும் பட்டய படிப்பு நிறைவு செய்த இளைஞர்களுக்கு தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் ரூ.1 லட்சம் ஊக்கத்தொகையுடன் ஓராண்டு தொழிற்பயிற்சி வழங்கப்படும்.