காங்கிரஸ் கட்சியின் வரலாறும் அதன் முக்கிய தமிழக தலைவர்களும் ஒரு பார்வை..!
காங்கிரஸ் கட்சியின் உருவாக்கம் மற்றும் அதன் முக்கிய தலைவர்களை சற்று விரிவாக பார்க்கலாம்.
காங்கிரஸ் கட்சியின் தொடக்கம்
இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி என்ற காங்கிரஸ் கட்சி.
1885 ஆம் ஆண்டு உமேஷ் சந்திர பானர்ஜி, தாதாபாய் நௌரோஜி, ஆலன் ஆக்டவியன் ஹியூம், சுரேந்திரநாத் பானர்ஜி மற்றும் வில்லியம் வெட்டர்பர்ன் ஆகியோரால் இந்த கட்சி தொடங்கப்பட்டது.
இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றது. பம்பாயில் 1885 டிசம்பரில் நடந்த கூட்டத்தில் உமேஷ் சந்திர பானர்ஜி இந்திய காங்கிரஸ் கட்சியின் முதல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் 1947ல் இந்தியா விடுதலை அடைந்த பின்னர் நாட்டின் அதிகாரம் மிகுந்த அரசியல் கட்சியாக உருவெடுத்தது.
சுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸ் கட்சியின் பயணம்
இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு பிறகு காங்கிரஸ் ஒரு அரசியல் இயக்கமாக மாறியது. அதற்கு ஜவர்ஹர்லால் நேரு தலைமையில் தனது அடுத்த கட்ட நகர்வை நோக்கி சென்றது காங்கிரஸ் கட்சி.
சுதந்திரமடைந்த பிறகு காங்கிரஸ் கட்சியின் மாற்றாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவெடுத்தது. அப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து சோஷலிஸ்ட்டுகள் தனி அணியாகப் பிரிந்து புதிய அரசியலை உருவாக்கினர்.
இடதுசாரி சிந்தனையை உடைய கட்சியாக உருவானது சோஷலிஸ்ட் கட்சி. இக்கட்சியின் ஜெயபிரகாஷ் நாராயண் மற்றும் ஆச்சார்யா நரேந்திர தேவ் ஆகியோர் இக்கட்சிக்கு தலைமை வகித்தனர்.
மேலும் அக்கட்சியில் இருந்த வலதுசாரி சிந்தனையாளர்கள் ஒன்றினைந்து சியாம பிரசாத் முகர்ஜி ஜனசங்கத்தை உருவாக்கினார்.
காங்கிரஸ் கட்சியில் மேலும் வட மத்திய இந்திய விவசாயிகளை மையப்படுத்தி ஜே.பி. கிருபாளினி உருவாக்கிய கிசான் மஸ்துார் பிரஜா கட்சியும் முக்கிய கட்சிகளில் ஒன்றாக உருவெடுத்தது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்த மேலும் சிலர் சிறு அமைப்புகளை தொடங்கினார். இருந்த போதும் நேரு இருந்த போது அவரின் கைகளே ஓங்கி இருந்தது.
நேருவின் மறைவும் - இந்திரா காந்தியின் வருகையும்
நேரு மறைந்த பின் காங்கிரஸ் கட்சியின் தலைமையை பொறுப்பேற்ற லால் பகதுார் சாஸ்திரியும் திடீரென உயிரிழந்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை காப்பாற்றவும் அதன் தொண்டர்களை தக்க வைக்கவும் ஒரு தலைமை தேவைப்பட்டது.
அப்போது தான் தலைமையேற்றார் நேருவின் மகள் இந்திரா காந்தி அவர் தலைமை பதவிக்கு வருவதற்கு காமராஜர் உதவியாகவும் இருந்தார். 1967 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர வைத்தார் இந்திரா காந்தி.
இதற்கு பின்பாக காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்த சில இயக்கங்கள் மற்றும் மாநில கட்சிகளாக திமுக, அகாலிதளம் உள்ளிட்ட மாநில கட்சிகள் வலிமையான இடத்தில் இருந்தது.
பின்னர் 1971 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 352 இடங்களில் வெற்றி பெற்று பிரதமராக தேர்நதெடுக்கப்பட்டார் இந்திரா காந்தி. பிரதமரான நிலையில் 1972 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில் வெற்றி பெற்று வங்க தேசத்தை உருவாக்கினார்.
1974 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அணு சோதனையினால் வலிமை மிக்க தலைவராக இந்திரா காந்தி மாறினார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் அவர் கொண்டு வந்த எதேச்சதிகாரம், நெருக்கடி நிலை அமல் போன்ற காரணங்களால் அவர் எதிர்வினைகளை சந்தித்தார்.
1977 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து மாபெரும் சக்தியாக உருவெடுத்தது ஜனதா கட்சி. முதல்முறையாக ஆட்சியை பறிகொடுத்து எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தார்.
கட்சிக்கு வெளியே மட்டுமல்லாமல் கட்சியின் உள்ளேயும் இந்திரா காந்திக்கு எதிர்ப்புகள் கிளம்பின. அப்போது காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்து ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் என பிளவுபட்டது. அவருக்கு எதிராக கிளம்பிய எதிர்ப்புகள் நீண்ட நாட்கள் தொடரவில்லை.
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஓரணியில திரண்ட ஜனதா கட்சியினர் பிளவுபட தொடங்கினர். தனது திறமையினால் அனைவரையும் ஈர்த்த இந்திரா காந்தி காங்கிரஸ் கட்சியை வழிநடத்தினார்.
பின்னால் காங்கிரஸ் கட்சியை நேரு குடும்பத்தை தவிர யாராலும் வழிநடத்த முடியாது என்ற நிலை உருவானது. காங்கிரஸ் கட்சியை வழிநடத்திய இந்திரா காந்தி ஆட்சியை பிடிக்க ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைத்தார். 1984 ஆம் ஆண்டு இந்திராகாந்தி மரணமடைந்தார்.
இதனால் ராஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமரானார். 5 ஆண்டுகள் ராஜீவ் காந்தி தலைமையில் நாட்டை ஆண்டு காங்கிரஸ் கட்சி போபர்ஸ் ஊழலால் மீண்டும் பின்னடைவை சந்தித்தது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய வி.பி.சிங் மீண்டும் ஜனதா கட்சிகளை ஒருங்கிணைத்து ஜனதா தளத்தை உருவாக்கினார்.
பின்னர் ஜனதா தளத்தில் ஜன சங்கம் இணைந்தது. பின்னால் பல்வேறு கருத்து வேறுபாட்டால் ஜனதா தளம் இரண்டாக உடைந்தது. அப்போது அதிலிருந்து வெளியே வந்த அத்வானி, வாஜ்பாய் போன்ற தலைவர்கள் இணைந்து 1980 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியை தொடங்கினர்.
இந்த கால கட்டத்தில் வலதுசாரிகளின் அரசியல் வேகமெடுக்க தொடங்கியது. பின்னர் எதிர் எதிர் கொள்கைகளை கொண்ட பாஜகவும், இடதுசாரிகளும் வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கவே ஜனதாதளத்தின் வி.பி.சிங் பிரதமரானார். ஆனால் அவரின் பிரதமர் பயணம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.
சோஷலிசத் தலைவர்களின் ஒற்றுமை குறையவே அவர்களுக்குள் இருந்த போட்டியும் வி.பி.சிங்கின் அரசை வீழ்த்தியது. பின்னர் 1991-ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலை சம்வத்தில் காங்கிரஸின் பயணத்தில் பல திருப்பு முனைகளை ஏற்படுத்தியது.
நேரு குடும்பத்தைச் சாராத நரசிம்மராவ் பிரதமராகினார்.பெரும்பான்மை இல்லாத அரசுக்கு அவர் தலைமை வகித்த நிலையில் பொருளாதாரச் சீர்த்திருத்தங்களை முன்னெடுத்தார். இந்த காலகட்டத்தில் தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் இழப்பை கொடுத்தது.
இதனால் 1996- ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்தது. பின்னர் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் தேவகவுடா, குஜ்ரால் போன்ற மாநில முதலமைச்சர்கள் பிரதமர் பதிவியில் அமர்த்தப்பட்டன.
1998 ஆம் ஆண்டு நடந்த பொது தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தது. அப்போது பாஜக பெரும் அரசியல் கட்சியாக உருவெடுத்து கூட்டணியின் கீழ் ஆட்சியை நடத்தியது.ஆனால் மீண்டும் தேர்தல் நடைபெற்ற நிலையில் வாஜ்பாய் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
யார் இந்த சோனியா காந்தி?
1946 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி பிறந்தவர் சோனியா காந்தி இவர் இத்தாலி வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர் ராஜீவ் காந்தியை திருமணம் செய்து கொண்டதன் மூலம் நேரு குடும்ப உறுப்பினர் ஆனார்.
தம் கணவர் படுகொலையை அடுத்து 1998 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 10 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வந்த அவர், பின்னர் அந்த பொறுப்பை தனது மகனிடம் கொடுத்தார்.
சோனியா காந்தியை அவரது ஆதரவாளர்கள் இராஜமாதா எனவும் தியாகத்தலைவி எனவும் அழைத்து வருகின்றனர்.
இவர் செல்வாக்கு மிகுந்த நபர்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார்.
சோனியா காந்தியின் அரசியல் நகர்வு
2004 ஆம் ஆண்டு நடத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 145 இடங்களில் மட்டும் வெற்றி பெற முடிந்தது. பின்னர் சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றி அரியணை ஏறியது.
10 ஆண்டுகள் பிரதமராக மன்மோகன் சிங் ஆட்சி நடத்தினார். அப்போது அவரின் ஆட்சி காலத்தில் காங்கிரஸ் கட்சி பல்வேறு துறைகளில் ஏற்பட்ட ஊழல்களால் பெரும் பின்னடைவை சந்தித்தது காங்கிரஸ் கட்சி.
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பல பிரச்சாரங்களை முன்னெடுத்த பாஜக 282 இடங்களில் வெற்றி பெற்று மோடியை பிரதமராக்கியது. பல ஆண்டுகளாக நாட்டை ஆண்டு வந்த காங்கிரஸ் கட்சி முதன் முறையாக 44 இடங்களை மட்டுமெ கைப்பற்றி கடும் தோல்வியை சந்தித்தது.
காங்கிரஸ் அல்லாத ஒரு தனிப்பெரும் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி பொறுப்பில் அமர்ந்தது இதுவே முதல் முறையாகும். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் பாஜக 303 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது.
இந்த தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.இது அக்கட்சி தொண்டர்களை கடும் மனசோர்வை ஏற்படுத்தியது.
தலைவரான ராகுல் காந்தி
கடந்த 19 ஆண்டுகளாக சோனியா காந்தி வகித்து வந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். ராகுல் காந்தி 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக இருந்து வந்தார்.
பின்னர் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி முதல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் தோல்வியடைந்ததை அடுத்து அவர் தனது காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் சோனியா காந்தி நீடித்து வருகிறார்.இவர் மாநில கட்சிகளுடன் இணைந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராகவும் இருந்து வருகிறார்.
தமிழகத்தின் முக்கிய மூத்த தலைவர்கள்
காமராஜர்
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1940 முதல் 1952 ஆம் ஆண்டு வரை காமராஜர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்தார்.
டாக்டர் வரதராஜுலு நாயுடு, கல்யாணசுந்தர முதலியார் மற்றும் ஜார்ஜ் ஜோசப் போன்ற தேசத்தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்ட காமராஜர் சுதந்திரப் போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடந்த அனைத்து போராட்டங்கள், மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற அவர், ஆறு முறை சிறையில் அடைக்கப்பட்டு, ஒன்பது ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவித்தார்.
1963 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். 1966 ஆம் ஆண்டு லால்பதூர் சாஸ்திரியின் திடீர் மரணத்தைத் தழுவ, 48 வயது நிரம்பிய நேருவின் மகள் இந்திராகாந்தியை இந்தியாவின் அடுத்த பிரதமரானார், காமராஜர்.
கக்கன்
விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் தலைசிறந்த அரசியல்வாதியும், தமிழக முன்னாள் அமைச்சருமானார் கக்கன்,
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிஸ் கமிட்டி தலைவர், இன்னும் பல பொறுப்புக்களையும், 1957 முதல் 1967 வரை நடைபெற்ற காங்கிரஸ் அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளையும் வகித்தவரும், தலைசிறந்த அரசியல்வாதியும் நிர்வாகியும் ஆவார்.
ஜி. கே. மூப்பனார்
ஜி. கே. மூப்பனார் முதன் முதலாக 1988 முதல் 1989 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் இரு முறை தமிழக காங்கிரஸ் தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராக எட்டாண்டுகளும் பணியாற்றிய இவர் கருத்து வேறுபாடால் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை நிறுவி அதன் தலைவராக பணியாற்றி இறுதியில் 30-8-2001 ல் காலமானார்.
அதை தொடர்ந்து குமரி ஆனந்தன், கே.வி. தங்கபாலு ,திண்டிவனம் ராமமூர்த்தி, ஈவிகேஎஸ் இளங்கோவன், பாலகிருஷ்ணா, ஜி.கே.வாசன், கிருஷ்ணசாமி, மீண்டும் கே.வி.தங்கபாலு, ஞானதேசிகன், மீண்டும் ஈவிகேஎஸ் இளங்கோவன், தற்போதைய எம்பி திருநாவுக்கரசர், காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்களாக பதவி வகித்துள்ளனர்.
தற்போதைய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரா கே.எஸ்.அழகிரி இருந்து வருகிறார்.