முதல்வர் ஸ்டாலினுக்காக சுவர் ஏறி குதித்து கிஃப்ட் வாங்கிய ராகுல் - இணையத்தை கலக்கும் வீடியோ!

M K Stalin Rahul Gandhi Coimbatore Viral Video
By Sumathi Apr 13, 2024 02:41 AM GMT
Report

முதல்வர் ஸ்டாலினுக்காக, ராகுல் காந்தி இனிப்பு வாங்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

 ராகுல் காந்தி 

கோவை செட்டிப்பாளையம் பகுதியில் நடந்த இந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

rahul gandhi

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக முதல்வர் ஸ்டாலினுக்காக ஒரு கடையில் இனிப்பு வாங்கும் வீடியோவை ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சுற்றிவளைத்து 'ஜெய் ஸ்ரீராம்' கோஷமிட்ட பாஜகவினர் - பறக்கும் முத்தம் கொடுத்த ராகுல் காந்தி!

சுற்றிவளைத்து 'ஜெய் ஸ்ரீராம்' கோஷமிட்ட பாஜகவினர் - பறக்கும் முத்தம் கொடுத்த ராகுல் காந்தி!

ஸ்டாலினுக்கு கிஃப்ட்

அதில் சிங்காநல்லூர் பகுதியில், சாலை தடுப்புச் சுவரை தாண்டி குதித்து ஒரு ஸ்வீட் கடைக்குள் நுழைகிறார் ராகுல். அங்குள்ள ஊழியர்கள், கடையின் உரிமையாளர் ஆகியோர் அவரை வரவேற்கின்றனர். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அங்கிருந்து விடைபெற்றுக் கொண்ட ராகுல்,

பொதுக்கூட்டத்தில் தான் வாங்கி வந்த இனிப்பை முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்தார். முதல்வர் ஸ்டாலினும் அதை இன்முகத்துடன் பெற்றுக் கொண்டார்.

மேலும், வீடியோவுடன் “தமிழ்நாட்டில் தொடர் பிரச்சாரத்துக்கு கொஞ்சம் இனிமையை சேர்க்கிறேன் - என்னுடைய சகோதரர் ஸ்டாலினுக்காக சிறிது மைசூர் பாக் வாங்கினேன்” என்று கேப்ஷனும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.