சுற்றிவளைத்து 'ஜெய் ஸ்ரீராம்' கோஷமிட்ட பாஜகவினர் - பறக்கும் முத்தம் கொடுத்த ராகுல் காந்தி!
தன்னை சுற்றிவளைத்து ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பிய பாஜகவினருக்கு பறக்கும் முத்தம் கொடுத்தார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.
ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை நடைபயணம் மேற்கொள்கிறார்.
இணைத்த பயணத்தில் கடந்த நான்கு நாட்களாக அசாம் மாநிலத்தில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று பிஸ்வந்த் மாவட்டம் முதல் நாகோன் வரையிலான யாத்திரையின்போது, ராகுல் காந்தி வந்த பேருந்தை பாஜக தொண்டர்கள் சுற்றி வளைத்தனர்.
பறக்கும் முத்தம்
பின்னர் அவர்கள் ராகுல் காந்தியை நோக்கி ஜெய் ஸ்ரீராம், மோடி, மோடி என கோஷமிட்டனர். இதைப் பார்த்த ராகுல் காந்தி உடனே பேருந்திலிருந்து வெளியே இறங்கி அவர்களுடன் பேச வந்தார்.
பின்னர் பேருந்தில் ஏறிய அவர் அங்கு நின்ற பாஜவினரை பார்த்து பறக்கும் முத்தங்களை கொடுத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, அன்பிற்கான கடை எப்போதும் எவருக்கும் திறந்து இருக்கும். ஒன்று பட்ட பாரதம்,வெல்லும் இந்தியா என குறிப்பிட்டுள்ளார்.