‘முகமது நபிகள் குறித்து இழிவான கருத்து: உலகளவில் இந்தியாவின் நிலையை பாஜக கெடுத்துவிட்டது’ - ராகுல் காந்தி

Rahul Gandhi BJP Arab Countries
By Swetha Subash Jun 06, 2022 12:42 PM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

முகமது நபிகள் குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர்கள் நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிந்தால் தெரிவித்த இழிவான கருத்து, அரபு நாடுகளில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இழிவான கருத்து - கண்டனம்

இந்த இழிவான கருத்துகள் தொடர்பாக சவுதி அரேபியா, குவைத், கத்தார், ஈரான், எகிப்து மற்றும் ஓமன் ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டன.

இந்நிலையில் இவர்களின் கருத்துக்கு அரபு நாடுகள் பலவும் பலத்த கண்டனங்களை தெரிவித்துள்ளன. கத்தார், துபாய், மற்றும் ஈரானிய துாதர்களை நேரில் அழைத்த அந்நாட்டு அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இத்தகைய கருத்துக்கள் எந்த வகையிலும் இந்திய அரசின் கருத்துக்களை பிரதிபலிக்கவில்லை. இவை தனிப்பட்ட உறுப்பினர்களின் பார்வையே ஆகும் என்று இந்திய தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.

‘முகமது நபிகள் குறித்து இழிவான கருத்து: உலகளவில் இந்தியாவின் நிலையை பாஜக கெடுத்துவிட்டது’ - ராகுல் காந்தி | Rahul Gandhi Bjp Bigotry Damaged India Globally

இந்நிலையில் முகமது நபிகள் குறித்து இழிவாக கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர்கள் நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிந்தால் ஆகிய இருவரை இடைநீக்கம் செய்து பாஜக அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராகுல் காந்தி கருத்து

இதற்கு இந்திய அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜகவின் சுப்பிரமணியன் சாமி பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி ட்வீட் செய்திருந்தார்.

இதை தொடர்ந்து, ’உள்நாட்டில் பிளவுபட்ட இந்தியா, தற்போது வெளியிலும் பலவீனமாகிறது. பாஜகவின் வெட்கக்கேடான மதவெறி நம்மைத் தனிமைப்படுத்தியது மட்டுமல்லாமல் உலகளவில் இந்தியாவின் நிலையையும் கெடுத்துவிட்டது.’ என காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கோகுல்ராஜ் கொலை வழக்கு : குற்றவாளிகளுக்கு ஜாமின் மறுப்பு!