கோகுல்ராஜ் கொலை வழக்கு : குற்றவாளிகளுக்கு ஜாமின் மறுப்பு!

Crime
By Swetha Subash Jun 06, 2022 11:24 AM GMT
Report

கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளியான கோகுல்ராஜுக்கு ஜாமின் வழங்க உச்சநீதிமன்ற மதுரைக்கிளை மறுத்துள்ளது.

கோகுல்ராஜ் கொலை வழக்கு

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் இவர் கல்லூரியில் தன்னுடன் படித்த நாமக்கல்லை சேர்ந்த மாணவியை காதலித்து வந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.

கோகுல்ராஜ் கொலை வழக்கு : குற்றவாளிகளுக்கு ஜாமின் மறுப்பு! | Gokulraj Honour Kill Accused Bail Plea Rejected

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், கல்லூரியில் தன்னுடன் படித்த நாமக்கல்லை சேர்ந்த மாணவியை காதலித்து வந்தார். இதனை ஏற்கமுடியாத சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் அவரை ஆவணக் கொலை செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டது.

தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக சடலமாக கோகுல்ராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது நாக்கும் துண்டிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதனை தொடர்ந்து யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் ஆணவக்கொலை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.

குற்றவாளிகள் தண்டனை விவரம்

இந்த விசாரணையில், 106 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 500 ஆவணங்களை விசாரித்து பொறியியல் பட்டதாரி கோகுல் ராஜ் கொலை வழக்கில் யுவராஜ், அருண், குமார், சங்கர், அருள்வசந்தம் செல்வகுமார், தங்கதுரை, சதீஸ்குமார், ரகு என்கிற ஸ்ரீதர், ரஞ்சித் ஆகிய 10 பேர் குற்றவாளிகள் என மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் தீர்ப்பளித்தார்.

கோகுல்ராஜ் கொலை வழக்கு : குற்றவாளிகளுக்கு ஜாமின் மறுப்பு! | Gokulraj Honour Kill Accused Bail Plea Rejected

அதன்படி குற்றவாளிகள் 10 பேருக்கும் ஆயுள் தண்டனையும், முதல் இரு குற்றவாளிகளுக்கு மூன்று ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். முதலாவது குற்றவாளி யுவராஜ் மற்றும் இரண்டாவது குற்றவாளியான யுவராஜின் ஓட்டுனர் அருணுக்கும் மூன்று ஆயுள் தண்டனை என ஆயுள் முழுவதும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மேலும் 6 பேருக்கு ஒரு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி சம்பத்குமார். மேலும் குற்றவாளிகளான பிரபு , கிரிதருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடுதலாக 5 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.5000 அபராதம் விதித்து மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜாமின் மறுப்பு

இந்நிலையில், இந்த வழக்கில் தண்டனை பெற்று வரும் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஜாமின் வழங்குவது குறித்து முடிவு எடுக்க முடியாது என உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோகுல்ராஜ் கொலை வழக்கு : குற்றவாளிகளுக்கு ஜாமின் மறுப்பு! | Gokulraj Honour Kill Accused Bail Plea Rejected

தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுக்கலாம் என ஜூலை 6-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், வழக்கு தொடர்பான ஆவணங்களை கீழமை நீதிமன்றத்தில் இருந்து பெற நீதித்துறை பதிவாளருக்கும் உத்தரவிட்டனர்.


நபிகள் நாயகத்தை இழிவாக பேசிய விவகாரம் : வேலைஇழக்கும் நிலையில் 30 லட்சம் இந்தியர்கள் ?